(UTV | கொழும்பு) –
தேவை உடைய 15 பல்கலைக்கழக மற்றும் பாடசாலை மாணவர்களிற்கு அவர்களின் கல்வி நடவடிக்கைகளை தொடர்ந்தும் மேற்கொள்வதற்காக கல்வி ஊக்குவிப்பு கொடுப்பனவு கல்முனை தாராள உள்ளங்கள் அறக்கட்டளை அமைப்பினால் மாதாந்த கொடுப்பனவு ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன. இது இவ் அமைப்பின் இரண்டாம் கட்ட மாதாந்த உதவித்திட்டமாகும்.
இந்நிகழ்வு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.
சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.சந்திரகுமார் பிரதம அதிதியாகவும், சிறப்பு அதிதியாக நன்கொடையாளரும் தாராள உள்ளங்கள் அறக்கட்டளையின் மகளீர் பிரிவு தலைவியுமான திருமதி.ஷரேன் பியுமி(பிரான்ஸ்) ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் அமைப்பின் தலைவர் ஜெ.ஜெயப்பிரகாஸ், செயலாளர் எஸ். ஸ்ரீகரன் பொருளாளர்,எஸ்.யுவசந்தராஜா மற்றும் அமைப்பின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இதன் போது உரையாற்றிய சமூகசேவை உத்தியோகத்தர் எஸ்.சந்திரகுமார் “தாராள உள்ளங்கள் அறக்கட்டளையானது அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் சிறந்த சமூகசேவையாற்றி வருவதுடன் எமது மக்களின் வாழ்வாதார, கல்வி உதவித்திட்டங்களை ஆற்றி வருகின்றமையை பாராட்டியதுடன் தொடர்ந்தும் இவ்வாறான பணிகளை செய்யவேண்டும் எனவும் கூறினார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්