உள்நாடுவிளையாட்டு

இலங்கையின் லங்கா பிறீமியர் லீக் தொடரில் – பி-லவ் கண்டி சம்பியனானது.

(UTV | கொழும்பு) –

கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற தம்புள்ள ஓறாவுடனான இறுதிப் போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே கண்டி முதற் தடவையாக சம்பியனானது. இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற ஓறாவின் அணித்தலைவர் குசல் மென்டிஸ், தமதணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஓறா, தனஞ்சய டி சில்வாவின் 40 (29), சதீர சமரவிக்கிரமவின் 36 (30), குசல் பெரேராவின் ஆட்டமிழக்காத 31 (25) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 147 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், சத்துரங்க டி சில்வா 4-0-25-2, நுவான் பிரதீப் 4-0-30-1, பதிலணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் 2-0-11-0, முஜீப் உர் ரஹ்மான் 4-0-24-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.

பதிலுக்கு 148 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய கண்டி, கமிந்து மென்டிஸின் 44 (37), மொஹமட் ஹரிஸின் 26 (22), மத்தியூஸின் ஆட்டமிழக்காத 25 (21), தினேஷ் சந்திமாலின் 24 (22), ஆசிஃப் அலியின் 19 (10) ஓட்டங்களோடு 19.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. பந்துவீச்சில், நூர் அஹ்மட் 4-0-27-3, பினுர பெர்ணாண்டோ 4-0-31-2, தனஞ்சய டி சில்வா 3-0-16-0, துஷான் ஹேமந்த 3-0-21-0, பிரமோத் மதுஷன் 2.5-0-20-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர். இப்போட்டியின் நாயகனாக மத்தியூஸும், தொடரின் நாயகனாக வனிடு ஹஸரங்கவும் தெரிவாகினர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான மழைவீழ்ச்சி

டீசல் தட்டுப்பாடு : ஸ்தம்பிக்கும் நிலையில் பேரூந்துகள்

அஜித் பிரசன்னவுக்கு மீண்டும் விளக்கமறியல்