உள்நாடுசூடான செய்திகள் 1

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்!

(UTV | கொழும்பு) –

2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைவாக உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை இந்த மாத இறுதியில் வெளியிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இதேவேளை, கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் விடைத்தாள்களுக்கான முதற்கட்ட மதிப்பீட்டுப் பணிகள் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் 27ஆம் திகதி வரை இடம்பெறும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டாளர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கை எதிர்வரும் மாதம் முதலாம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சாணக்கியன் எம்.பியின் அலுவலகத்தில் முற்றுகை-100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பண மோசடியால் தஞ்சம்.

தேர்தல் பிரச்சாரம்: கோத்தாவின் பாதுகாப்பிற்கு யோசிதவினால் தொண்டர் குழு

பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளவதில் அவசரப்பட தேவையில்லை