உள்நாடு

எதிர்க்கட்சித் தலைவருக்கும் உலக வங்கியின் பிரதிநிதிகளுக்கு இடையிலான விசேட சந்திப்பு!

(UTV | கொழும்பு) –

எதிர்க்கட்சித் தலைவரின் தலையீட்டின் ஊடாக நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாண்மையாளர்களின் பிரச்சினைகள் உலக வங்கியிடம் முன்வைக்கப்பட்டன. நுண்,சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டுள்ள பல நிதி மற்றும் கடன் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் உலக வங்கியின் பிரதிநிதிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு எடுத்துரைத்தார்.

இதற்கு முன்னதாகவும் நுண்,சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகளைச் சந்தித்து தாம் எதிர்தோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் தலையிட்டு சந்தர்ப்பம் வழங்கியிருந்தார்.அதன் மற்றுமொரு கட்டமாக,உலக வங்கியின் பிரதிநிதிகள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள்,தொழில்முனைவோர் நேற்று இவ்வாறு ஒன்றுகூடினர். கடந்த கொரோனா காலத்தில் தம்மால் தங்கள் தொழிலை சரியாக மேற்கொள்ள முடியவில்லை என்றும்,கடந்த அரசாங்கத்தின் திறமையற்ற ஆட்சி நிர்வாகத்தின் காரணமாக நாடு வங்குரோத்தடைந்தமையால் தங்களின் தொழில்கள் நஷ்டத்தை எதிர்நோக்கின என்றும்,இதன் காரணமாக கடனை செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், கடனை செலுத்துவதற்கு சாதகமான வேலைத்திட்டம் ஒன்றை வழங்குமாறும் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாண்மையாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தற்போதைய அரசாங்கம் மனிதாபிமானமற்ற முறையில் பரேட் சட்டத்தை அமுல்படுத்துவதால் தாம் உட்பட நாடளாவிய ரீதியில் பரந்து கிடக்கும் நுண்,சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் மற்றும் தொழில்முனைவோர் அநாதரவாகியுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர். இந்நிகழ்விற்கு Alejandro Alvarez (Country Manager,IFC),கிரிஷான் அபேகுணவர்தன (Senior Economist,IBRD),மற்றும் அமில தஹநாயக்க (Economist,IBRD) ஆகியோர் கலந்து கொண்டதோடு மற்றொரு பிரதிநிதிகள் குழுவினர் இணையவெளி ஊடாக இணைந்து கொண்டனர். இதில் Faris H. Hadad Zervos (World Bank Country Director,Nepal, Maldives and Sri Lanka), டி. எச்.சி.அதுருபனே(Lead Economist, IBRD),திலினிகா பீரிஸ் (External Affairs Officer, IBRD),சவனி ஜயசூர்ய(ET Consultant, IFC),ரிச்சர்ட் வாக்கர்,IBRD) Senior Economist,IBRD) மற்றும் Peter Mousley(Lead Private Sector Specialist, IBRD) ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்,நாலக கொடஹேவா,லக்ஸ்மன் கிரியெல்ல,எரான் விக்கிரமரத்ன,நிரோஷன் பெரேரா மற்றும் ஹர்ஷன ராஜகருணா ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல், மோசடி – விசாரணைகள் ஆரம்பம் – வசந்த சமரசிங்க

editor

வடக்கு ரயில் சேவைகள் வழமைக்கு

கொள்கலன் போக்குவரத்து கட்டணம் 4 % ஆல் குறைப்பு

editor