(UTV | கொழும்பு) –
இன்றைய நாட்களில் நிலவும் கடுமையான வெப்பத்தின் பொருட்டு சருமத்தை பாதுகாப்பது மிகவும் அவசியமானது என தோல் நோய் வைத்திய நிபுணர் நயனி மதரசிங்க தெரிவித்துள்ளார்.
சூரியக்கதிர்களிலிருந்து பாதுகாக்கும் கிரீம் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலம் சருமத்தைப் பாதிக்கக்கூடிய தீவிரமான சூரிய ஒளியின் விளைவுகளை குறைக்க முடியும் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
கடும் சூரியக்கதிர் பாதிப்பால் தோல் புற்றுநோய் உருவாகும் அபாயம் உள்ளதாக அவர் மேலும் எச்சரித்தார். ”அதிக வெப்பம் நிலவும் முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலான காலப்பகுதியில் வெளியில் செல்வதைத் தவிர்ப்பது நல்லது. இருந்தாலும் அவ்வேளைகளில் நீங்கள் வெளியே கட்டாயம் செல்ல வேண்டுமானால், வெப்பத்திலிருந்து பாதுகாத்து கொள்வதற்கான முறைமைகளை அவசியம் பின்பற்ற வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්