உள்நாடுசூடான செய்திகள் 1

அதிகரிக்கும் கோதுமை மாவின் விலை!

(UTV | கொழும்பு) –

இந்தியாவில் இருந்து கோதுமை மாவை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கத்திடம் அனுமதி கோரிய போதிலும், அதற்கான அனுமதி இதுவரை கிடைக்கவில்லை என அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். கோதுமை மா இறக்குமதிக்கு உரிமம் தேவை எனக் கூறி, கடந்த ஜூலை 14ஆம் திகதி முதல் இந்தியாவில் இருந்து கோதுமை மா இறக்குமதியை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் இடைநிறுத்தியுள்ளதாகவும், இதனால் கோதுமை மாவை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலைமையினால் எதிர்காலத்தில் கோதுமை மாவின் விலையில் அதிகரிப்பு அல்லது கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பௌத்த சமயம் உலகவாழ் மக்களுக்கு சொந்தமானது

கொவிட் தொற்றினால் 98 இலங்கையர்கள் மரணம்

கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பு [UPDATE]