உள்நாடு

பொக்சிங்யில் முஸ்லிம் மகளிர் கல்லூரியின் மாணவி மரியம் அனஸ் வெற்றி!

(UTV | கொழும்பு) –    பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியின் மாணவி மரியம் அனஸ் அத்துடன்  கொழும்பு 2  சிலேவ் ஜலன்ட்  பொக்சிங் கழகத்தின் அங்கத்தவராகவும்  என்.என். தனஞ்ஜய பயிற்றுவிப்பாளரின்  பயிற்சி அளிக்கப்பட்டு இரத்தினபுரியில் பாடசாலை மட்டத்தில்  கனிஷ்ட  மாணவிகளுக்கு நெவியா பொக்சிங் வெற்றிக் கிண்ணத்துக்கான  சுற்றுப் போட்டியில் முதல் சுற்றுக்கு மரியம் அனஸ்  வெற்றியீட்டினார்.

மரியம் அனஸ் முதலாவது முஸ்லிம் பெண் பொக்சிங் மாணவியாகவே இப்போட்டியில் கலந்து கொண்டார்.  (44-46 கிலோ எடை)  இச் சுற்றுப் போட்டி கடந்த ஆகஸ்ட் 02 .2023 இரத்தினபுரி சீவலி அரினா திடலில் நடைபெற்றது. முதலாவது சுற்றுப்போட்டியில் மரியம் அனஸ் – எதிர் இ.பி.எதிரிசிங்க உடன் மோதி வெற்றியீட்டினார். இரண்டாவது தொடரில் மரியம் எதிர் அனுராதாவின் தோல்வியைத் தழுவினார்.

இச் சுற்றுப் போட்டியில் நாடு முழுவதும் உள்ள பொக்சிங் போட்டியில் முதலாவது முஸ்லிம் மாணவியாக மரியம் அனஸ் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. இவர் சிலேவ் ஜலன்ட் பொக்சிங் கழகத்தில் இணைந்து பயிற்சி பெற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும். இவரின் தந்தை கொழும்பு 2 சிலேவ் ஜலன்ட் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மற்றும் பல்வேறு விளையாட்டு வீரரும் ஆவார்.

அஷ்ரப் சமத்

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் எந்தவொரு பிரச்சார பொதுக் கூட்டங்களும் நடத்தப்படாது

கொரோனா : பலி எண்ணிக்கை 184

மற்றுமொரு அரச தொலைகாட்சி – வானொலி சேவைகள் முடக்கம்