உள்நாடு

நுவரெலியா மாவட்ட வீரர்களுக்கான பாராட்டு விழா!

(UTV | கொழும்பு) –

இலங்கைக்கும் புகழைக் கொண்டுவந்த விளையாட்டு வீரர்களுக்கான பாராட்டு விழா கண்டி மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் திரு.மகிந்த திசாநாயக்க தலைமையில் நேற்று நுவரெலியாவில் நடைபெற்றது.
உடற்கட்டமைப்பு விளையாட்டுத் துறையில் வெற்றிகளைப் பெற்று நுவரெலியா மாவட்டத்திற்கும் இலங்கைக்கும் புகழைப் பெற்றுத்தந்த வீரர்களுக்கும் இங்கு மாகாண மற்றும் தேசிய மட்டத்தில் பல வெற்றிகளைப் பெற்ற வீரர்களுக்கும் நுவரெலியாவில் ஏற்பாடு செய்யப்பட்ட முதலாவது பாராட்டு விழா இதுவாகும். ஜே.பி. உபுல், கயான் கனிஷ்க, கிறிஸ்டி கோம்ஸ், சங்கர் கணேஷ், சர்வதேச மட்டத்தில் பல வெற்றிகளைப் பெற்ற வீரர் எரந்த புத்திக, சுபாஷ் பெத்மா ஆகியோருக்கு கண்டி மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரினால் சுரத்தின் பாராட்டுக் கிண்ணம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு, லிட்டில் இங்கிலாந்து பிரைவேட் நிறுவனம் அனுசரணை வழங்கியிருந்ததுடன், இந்நிகழ்வில் பெருந்தொகையான உடற்கட்டமைப்பு பயிற்சியாளர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஆபத்து நிறைந்த மரங்களை அகற்ற நடவடிக்கை

ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இதுவரை 103 முறைப்பாடுகள்

மோட்டார் வாகன திணைக்களத்தின் சேவைகள் நாளை மீண்டும் ஆரம்பம்