உள்நாடுசூடான செய்திகள் 1

ரணில் விக்ரமசிங்க என்ற பெருந்தலைவரை வீழ்த்த முடியாது –ரணில் அமோக வெற்றிபெறுவார் : ஹரின்

(UTV | கொழும்பு) –

மூவின மக்களின் அமோக வாக்குகளால் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஜனாதிபதி கதிரையில் அமர்வது உறுதி என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், சஜித் பிரேமதாச தம்பட்டம் அடிப்பதாலோ அல்லது நாமல் ராஜபக்ச மேடையில் முழங்குவதாலோ அல்லது அநுரகுமார திசாநாயக்க போராட்டக்காரர்களைத் தூண்டுவதாலோ ரணில் விக்ரமசிங்க என்ற பெருந்தலைவரை வீழ்த்த முடியாது.

தற்போது ஜனாதிபதி பதவியில் இருக்கும் ரணில் விக்ரமசிங்க, சர்வதேச நாடுகளின் ஆதரவுடன் நாட்டுக்கான சேவையைத் திறம்படச் செய்து வருகின்றார்.மூவின மக்களும் அவர் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளார்கள். அவர் அடுத்த தடவையும் ஜனாதிபதி கதிரையில் அமர்ந்து, நாட்டு மக்களுக்கு முழு மூச்சுடன் பணியாற்றுவார் என தெரிவித்துள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நடப்பு ஆண்டுக்கான பட்டமளிப்பு நிகழ்வு

இணைய மோசடி தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு.

“டிக்கி அக்கா” கைது