(UTV | கொழும்பு) –
அதிகாரப் பகிர்வு தொடர்பில் கதைப்பதற்கு முன்னர் மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என டலஸ் அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜி.எல்.பீரிஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
”அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பேசுகின்றார். எனினும், மக்கள் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி பிரதிநிதிகளைத் தெரிவுசெய்வதற்கு தேர்தலொன்று நடைபெறுவதற்கான திட்டங்கள் ஒன்றும் வகுக்கப்படவில்லை. அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வடக்கு, கிழக்கு வாக்குகளை இலக்கு வைத்தே 13 ஆவது திருத்தச் சட்டம் பற்றி ஜனாதிபதி பேசுகின்றார்.
அதேபோல் நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைத் திசை திருப்பும் நோக்கிலேயே ஜனாதிபதித் தேர்தல் குறித்து தகவல்கள் பரப்பப்டுகின்றன.இருப்பினும் ஜனாதிபதி முன்கூட்டியே ஜனாதிபதித் தேர்தலை நடத்த மாட்டார். எனினும் 2024 ஜுலை இறுதி அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்துக்குள் ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு கட்டாயம் வெளியாக வேண்டும்.
இதனை எவரும் பிற்போட முடியாது. அரசமைப்பிலும் அதற்கு இடமில்லை.” என தெரிவித்துள்ளார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්