உள்நாடு

வெளிநாடு சென்றுள்ள இலங்கை பணியாளர்களுக்கு – மகிழ்ச்சித்தகவல்!

(UTV | கொழும்பு) –

வெளிநாடு சென்றுள்ள இலங்கை பணியாளர்களுக்கு வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டம் ஒன்று தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை ஆகியன ஒன்றிணைந்து இதை நடை முறைப்படுத்தவுள்ளன. மூன்று நடைமுறைகளில் இந்த வீடுகளை நிர்மாணிக்க எதிர்பார்க்கப்படுகிறது. இதன் முதலாவது நடைமுறைப்படி, சொந்த காணியில் வீடு நிர்மாணிப்பது. இரண்டாவது, காணி இல்லாதவர்களுக்கு நகரத்திற்கு வெளியே அவர்கள் விரும்பும் பகுதியில் வீடுகள் நிர்மாணித்தல். மூன்றாவது முறை, அடுக்குமாடி குடியிருப்புகளை நிர்மாணித்தல். இந்த வீடமைப்புத் திட்டத்திற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நிதியுதவி வழங்குவதுடன், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்படும். இது தொடர்பான கூட்டு அமைச்சரவை பத்திரம் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரால் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் இணையத்தளம் ஏற்கனவே வீடமைப்புத் தேவையிலுள்ள வெளிநாட்டுப் பணியாளர்கள் தொடர்பில் கணக்கெடுப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளதுடன், இதுவரை சுமார் 1000 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், மாவட்ட மட்டத்திலும் வீடுகள் தேவைப்படும் வெளிநாட்டில் பணிபுரியும் தொழிலாளர்களின் குடும்பங்கள் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இசை நிகழ்ச்சியில் மோதல் – ஒருவர் பலி – 5 பேர் காயம்.

கடவுச்சீட்டுக்காக இன்றும் நீண்ட வரிசை – எதிர்காலத்தில் டோக்கன்கள் இணையத்தளத்தில்

editor

பெருந்தெருக்கள் அபிவிருத்தி திட்டங்களை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி அநுர பணிப்பு

editor