(UTV | கொழும்பு) –
யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்ட சம்பவமானது இன சுத்திகரிப்பு அல்ல. மாறாக அவர்கள் பாதுகாப்பாக உயிருடன் இடம்மாற்றப்பட்டார்கள் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டசம்பவமானது இன சுத்திகரிப்பு அல்ல. மாறாக அவர்கள் பாதுகாப்பாக உயிருடன் இடம்மாற்றப்பட்டதுதான் நடந்தது. இதற்கான மூல காரணம் 1990 ஆம் ஆண்டு பிரேமதாச அரசாங்கம் இருந்த காலப்பகுதியில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை பிரித்தாளும் தந்திரத்தை கையாண்டிருந்தார்.
இதன் தொடர்ச்சியாக ஊர்காவல்படையை உருவாக்கி 1990 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அம்பாறையில் முதலாவது தாக்குதல் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பிடிக்கப்பட்டு சுடப்பட்டு எரிக்கப்பட்ட வரலாறுகள் உள்ளன. இந்த தாக்குதல்கள் பின்னர் மட்டக்களப்பிலும் தொடர்ந்தது. இந்த பின்னணியில் தான் யாழ்ப்பாணத்தில் உள்ள முஸ்லிம் மக்களை பாதுகாப்பாக விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் என்பது வரலாறு.”எனவும் அவர் கூறியுள்ளார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්