(UTV | கொழும்பு) –
இலங்கை இன்று உலக நாடுகளிடம் கடன் வாங்கும் நாடாக இருந்தாலும், ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையின் கீழ், எதிர்காலத்தில் உலக நாடுகளுக்கு கடன் வழங்கும் நாடாக இலங்கை மாறும் என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் திஸ்ஸமஹாராம தொகுதிக் குழு கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கை மக்கள் வேறு நாடுகளுக்கு வேலைக்குச் செல்வதற்குப் பதிலாக, உலக மக்கள் இலங்கையில் வேலை செய்ய வரும் யுகம் பிறக்கும்.
இதனை கேட்டு சிலர் சிரித்தாலும்,இலங்கையின் தோட்டங்களில் வேலை செய்ய இந்தியாவில் இருந்து மக்கள் அழைத்து வரப்பட்டதை மறந்து விடக்கூடாது என அவர் மேலும் தெரிவித்தார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්