உள்நாடு

மின்சார உற்பத்திக்கு தடை ஏற்படும் பட்சத்தில் – மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயம்!

(UTV | கொழும்பு) –

மின்சார உற்பத்திக்கு தடை ஏற்படும் பட்சத்தில் எதிர்காலத்தில் மின்சாரத் துண்டிப்பு  இடம்பெற வாய்ப்புகள் உள்ளதாக நீர் மின் நிலைய பொறியியலாளர்கள் கூறுகின்றனர்.

மத்திய மலைநாட்டில் மற்றும் நாட்டில் நிலவும் கடுமையான வறட்சியான காலநிலையால் காசல்ரீ மற்றும் மவுச்சாகலை நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான லக்சபான கென்யோன் நீர் மின் நிலைய பொறியியலாளர்கள் தெரிவித்தனர்.மவுச்சாக்கலை நீர்த்தேக்கத்தின் 120 அடியாக இருந்த நீர் மட்டம் 48 அடிகளாலும், காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் 155 அடியிலிருந்து 33 அடிகளாலும் குறைந்துள்ளதாகவும் பொறியியலாளர்கள் சுட்டிக்காட்டினர்.

இவ்விரண்டு நீர்த்தேக்கங்களில் இருந்துதான் கெனியோன், விமலசுரேந்திர, லக்ஷபான, புதிய லக்ஷபான, பொல்பிட்டிய சமனல கலுகல ஆகிய நீர்த்தேக்கங்களுக்கு சுரங்கம் வழியாக நீர் விநியோகம் இடம்பெறுவதுடன், மின்சார உற்பத்திகளும் இடம்பெற்று வருகின்றன.
வறட்சியான காலநிலை தொடர்ந்தால் இந்த நீர்த்தேக்கங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு குறையுமென பொறியியலாளர்கள் சுட்டிக்காட்டுவதுடன், காசல்ரீ மற்றும் மவுச்சாக்கலை நீர்த் தேக்கங்களில் இருந்தான நீர் விநியோகமும் பாதிக்கப்படும்.

மின்சார உற்பத்திக்கு தடை ஏற்படும் பட்சத்தில் எதிர்காலத்தில் மின்சாரத் துண்டிப்பும் இடம்பெற வாய்ப்புகள் உள்ளதாக பொறியியலாளர்கள் கூறுகின்றனர்.இதேவேளை, உட வலவை நீர்த்தேக்கத்தில் இருந்து சமனலவேவ நீர்த் தேக்கத்துக்கு நீர் விடுவிக்கப்பட வேண்டும் இலங்கை விவசாய சம்மேளனம் தொடர்சியான போராட்டங்களை முன்னெடுத்துவந்திருந்ததமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரஷ்யாவில் இருந்து நாடு திரும்பிய 260 இலங்கையர்கள்

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

வாதுவை மற்றும் களுத்துறை உள்ளிட்ட பகுதிகளுக்கு நீர்வெட்டு