(UTV | கொழும்பு) – இலங்கையில் சுற்றுலா மேற்கொண்டுள்ள பிரித்தானிய முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூன் செயற்பாடு பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.சர்வதேச அரங்கில் பலம்பொருத்திய பிரதமராக செயற்பட்ட கெமரூன், தனது மனைவியுடன் எளிமையான முறையில் இலங்கையை சுற்றிப் பார்த்துள்ளார்.உனவட்டுன, மிரிஸ்ஸ, சிகிரியா, உடவலவ, பின்னவல, திருகோணமலை ஆகிய பகுதிகளுக்கு அவர் பயணம் மேற்கொண்டிருந்தார். இவர் வீதி ஓரங்களில் உள்ள சிறிய பெட்டிக்கடைகளிலும் உணவு பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும். கேமரூனை அடையாளம் கண்ட ஒரே நபர் விமான நிலைய குடிவரவு அதிகாரி மாத்திரமே என அவர் கூறியுள்ளார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්