உள்நாடு

கடும் நெருக்கடியிலும் தடையின்றி மின்சாரத்தை வழங்க நடவடிக்கை – இலங்கை மின்சார சபை!

(UTV | கொழும்பு) –

நாட்டில் வறட்சியான காலநிலை நிலவுகின்ற போதிலும் தடையின்றி தொடர்ச்சியாக மின்சார விநியோகத்தை வழங்க எதிர்பார்த்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.தொடர் மின்சாரத்தை வழங்குவதற்கு ஏற்கனவே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.எவ்வாறாயினும், நுரைச்சோலை நிலக்கரி ஆலையில் உள்ள மின் உற்பத்தி இயந்திரம் ஏற்கனவே செயலிழந்துள்ளது.இது தொடர்ச்சியான மின்சார விநியோகத்திற்கு தடையாக இருக்குமா என இலங்கை மின்சார சபையிடம் வினவப்பட்டுள்ளது.

தற்போது செயலிழந்துள்ள நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தை எதிர்வரும் செவ்வாய்கிழமைக்குள் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்க முடியும் என சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.நுரைச்சோலை நிலக்கரி மின்நிலையத்தில் 03 மின் உற்பத்தி இயந்திரங்கள் உள்ளன, அவற்றில் ஒன்று தற்போது பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.அதற்கமைய, அந்த ஆலையில் தற்போது ஒரு ஜெனரேட்டர் மட்டுமே இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நீர் கட்டணம் செலுத்தாதோர் விசேட அறிவித்தல்

தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை

மின்வெட்டு ஒரு மணி நேரமாக குறைப்பு