உள்நாடுசூடான செய்திகள் 1

13குறித்த கோடபாய வாய் திறப்பாரா? SLPP MP சன்னஜெயசூசுமன

(UTV | கொழும்பு) –

13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவின் முயற்சிகள் குறித்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது மௌனத்தை கலைக்கவேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் சன்னஜெயசூசுமன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஜனாதிபதியின் முயற்சிகளை மீண்டும் கடுமையாக கண்டித்துள்ள அவர் தேசத்தின் நலன்களிற்கு பாதகமான விதத்தில் விக்கிரமசிங்க ராஜபக்ச அரசாங்கம் செயற்பட முயல்வதால் கோட்டாபய ராஜபக்ச தொடர்ந்தும் அமைதியாகயிருக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

2019 நவம்பரில் கோட்டாபய ராஜபக்ச வென்ற ஐந்துவருடபதவிக்காலத்தை பூர்த்தி செய்வதற்காக நாடாளுமன்றம் ரணில்விக்கிரமசிங்கவை தெரிவு செய்தது என தெரிவித்துள்ள சன்ன ஜெயசுமன பயங்கரவாதத்திற்கு எதிரான வெற்றியை பிரதிபலிக்கும்புதிய அரசமைப்பு என்ற வாக்குறுதியின்அடிப்படையில் வெற்றிபெற்ற கோட்டாபய ராஜபக்ச தனது மக்கள் ஆணை துணிச்சலாக ஒற்றையாட்சியை இல்லாமல் செய்வதற்காக பயன்படுத்தப்படும்போது முன்னாள் பாதுகாப்பு செயலாளர் எவ்வாறு மௌனமாகயிருக்கமுடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி இந்த விடயத்தில் தெளிவான நிலைப்பாட்டை எடுக்காவிட்டால் தற்போதைய நிகழ்ச்சி நிரலுக்கு அவர் மறைமுக ஆதரவு என்ற தவறான கருத்தைஅது ஏற்படுத்தலாம் என தெரிவித்துள்ள அவர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் எவ்வாறு தனதுமக்கள் ஆணையை தவறாக பயன்படுத்த அனுமதிக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வட்டுக்கோட்டை இளைஞன் மரணம் – நீதிமன்றில் வெளியாகும் முக்கிய சாட்சிகள்

CEYPETCO தீர்மானமில்லை

திங்கள் முதல் நகரங்களுக்கு இடையிலான கடுகதி ரயில் சேவைகள்