(UTV | கொழும்பு) –
இலங்கையில் கிடைக்கும் கோவிட் தடுப்பூசிகளின் இருப்பு எதிர்வரும் ஆகஸ்ட் 24 ஆம் திகதி காலாவதியாவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்நிலையில் தற்போது சினோபார்ம் தடுப்பூசிகள் கையிருப்பில் இருப்பதாக கோவிட் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார். எனவே, யாராவது தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றால், அவர்கள் அருகில் உள்ள மருத்துவ அதிகாரி அலுவலகத்தில் அதனை செலுத்திக்கொள்ளலாம் என்று அவர் கூறியுள்ளார்.
இலங்கையில் கோவிட் தடுப்பூசிகள் இல்லை இதற்கிடையில்,தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத பலர் தங்களுடைய சர்வதேச பயண தேவைகளுக்காக சுகாதார அதிகாரிகளிடம் தடுப்பூசி சான்றிதழ்களை கோரியுள்ளனர் எனினும் இலங்கையில் கோவிட் தடுப்பூசிகள் இல்லை என்று பொது சுகாதார பரிசோதகர் ஒன்றியத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார் .இலங்கையில் எட்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள், கோவிட் தடுப்பூசிகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්