உள்நாடு

ஸ்ரீ ரங்கா வழக்கில் பொலிஸ் பரிசோதகருக்கு 7 வருட சிறைத்தண்டனை!

(UTV | கொழும்பு) –

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்கா வழக்கில் சாட்சியங்களை மறைக்க முயன்ற பொலிஸ் பரிசோதகருக்கு 7 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 24 மாத சிறைத்தண்டனை; வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு.

2011 ஆம் ஆண்டு வவுனியா செட்டிக்குளம் பிரதேசத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்கா செலுத்தி சென்ற ஜீப் வண்டி விபத்திற்கு உள்ளானத்தில் அதில் பயணித்த அமைச்சரவை பாதுகாப்பு பிரிவை சேர்ந்த பொலிஸ் அதிகாரி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தாக்கல் செயயப்பட்ட அறிக்கை போலியானது என தெரியவந்ததையடுத்து, வவுனியா மேல் நீதிமன்றில் தொடர்ந்து நடைபெற்று வரும் வழக்கில் சாட்சியங்களை மறைக்க முற்பட்ட பொலிஸ் பரிசோதகர் ரொசான் சஞ்சீவ அவர்களுக்கு 7 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 24 மாதகால சிறைத்தண்டனை வழங்கி, மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம்.மிகாஸ் உத்தரவிட்டார்.

கொல்லப்பட்ட அதிகாரியே வாகனத்தை ஓட்டிச் சென்றதாக கூறி வவுனியா நீதிமன்றத்தில் பீ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அப்போது செட்டிக்குளம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக இருந்த பொலிஸ் பரிசோதகர் ரொசான்சஞ்ஜீவ கையெழுத்தை போலியாக இட்டே வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டது.இந்த விபத்து 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் திகதி செட்டிக்குளம் பிரதேசத்தில் இடமபெற்றுள்ளது. ஸ்ரீரங்கா ஓட்டிச் சென்ற லேண்ட் கிறசர் ரக ஜீப் வண்டியே மதவாச்சியில் இருந்து மன்னார் நோக்கி சென்ற பொழுது ஜீப் வண்டி வீதியை விட்டு விலகி, செட்டிக்குளம் வைத்தியசாலையின் மதில் சுவரில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் ஸ்ரீ ரங்காவின் பாதுகாப்புக்காக இணைக்கப்படடிருந்த அமைச்சரவை பாதுகாப்பு பிரிவை சேர்ந்த உறுப்பினர் புஸ்பகுமார என்பவர் உயிரழந்தார்.எனினும் ஸ்ரீ ரங்காவிடம் விசாரணை நடத்திய போது தான் வாகனத்தை ஓட்டிச் செல்லவில்லை எனக் கூறியுள்ளார். ஸ்ரீ ரங்கா வாகனத்தை ஓட்டிச் சென்றமைக்காக முக்கிய சாட்சியங்கள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளன. இதனை தொடர்ந்து விசாரணைகளில் மூலம் கிடைத்த அனைத்து சாட்சியங்களும் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டு சட்டமா அதிபரின் ஆலோசனைகளின் படி உடனடியாக அடுத்த கட்ட விசாரணைகள் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து நீதிமன்ற விசாரணகள் தொடரந்து நடைபெற்று வந்த நிலையில் வழக்கில் பொலிஸ் பரிசோதகர் ரொசான்சஞ்ஜீவ ஸ்ரீ ரங்காவை காப்பாற்றுவதற்காக சாட்சியங்களை மறைக்க முற்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டது. அதாவது முதலாவது குற்றமாக குற்றவாளியின் குற்றங்கள் மறைக்கப்பட்டு தப்பிக்க வைத்த குற்றத்துக்காக 7 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 6 மாதகால சிறைத்தணடனையும், போலியான ஆவணங்கள் தயாரித்தமைக்காக 7 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 6 மாதகால சிறைத்தணடனையும், மூன்றாவது குற்றச்சாட்டாக போலியான ஆவணங்கள் தயாரித்து உயர் அதிகாரிகளை ஏமாற்றிய குற்றத்துக்காக 7 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 12 மாதகால சிறைத்தணடனையும் வழங்கப்பட்டது.

அத்துடன் சம்பவத்தில் கொல்லப்பட்ட அமைச்சரவைபாதுகாப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி புஸ்பகுமாரவின் மனைவிக்கு நஷ்ட ஈடாக ஐந்து இலட்சம் ரூபாய் வழங்க வேணடும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மேலும் 3 கொரோனா நோயாளர்கள் குணமடைந்தனர்

(UPDATE) அஸ்வெசும திட்டத்தால், சமூர்த்திக்கு பாதிப்பு?

“முன்னாள் அமைச்சர்களின் குப்பையை” தூக்கி எறிய தயார்”