(UTV | கொழும்பு) –
மலையகம் 200வருட நிறைவை முன்னிட்டு மலையகம் 200நாம் இலங்கையர்கள் எனும் தொனிபொருளுக்கமைய தமிழ் முற்போக்கு கூட்டணியினாள் ஏற்பாடு செய்யப்பட்ட நடைபவணியானது நுவரெலியா மற்றும் ஹட்டன் மணிகூட்டு கோபுரத்திற்கு முன்பு மத தலைவர்களின் அனுஸ்டாங்களோடு ஆரம்பிக்கப்பட்டது.
இந்த நடைபவணியில் ஹட்டன் மணிகூட்டு கோபுரத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட நடைபவணியில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோகனேசன். தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம்.உட்பட பலர் கலந்து கொண்டதோடு நுவரெலியா நகரில் ஆரம்பிக்கப்பட்ட நடைபவணியில் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி இராதாகிருஷ்ணன். மற்றும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.உதயகுமார்.கண்டிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் என் பெருந்திரளான மலையக பெருந்தோட்ட மக்களும் கலந்து கொண்டனர்.
ஹட்டனில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட நடைபவணியானது ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியின் ஊடாக கொட்டகலை பத்தரை.ஊடாக தலவாக்கலை பேருந்து நிலையத்திற்கு சென்றடைய உள்ளதோடு நுவரெலியா நகரில் ஆரம்பிக்கப்பட்ட நடைபவணி நானுஒயா லிந்துளை வழியாக தலவாக்கலை பேருந்து நிலையத்தினை வந்தடைந்துஇந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்து இருநூறு வருடங்கள் கடந்துள்ள போதிலும் இதுவரையிலும் மலையக மக்களுக்கு சொந்தகாணி உரிமையினை வழங்கப்பட வேண்டும் எனவே இந்த 200வருடங்கள் கடந்துள்ள போதிலும் மலையக மக்களுக்கான சொந்த காணி வழங்கப்படவில்லை மலையக மக்களுக்கு சொந்த காணி கல்வி சுகாதாரம் விளையாட்டு போன்ற சகலதுறை களிலும் மலையக மக்களுக்கு உரிமைகளை வழங்கப்பட வேண்டும் என்பதே தமது கோரிக்கையென நடைபவணியில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්