உள்நாடு

இலங்கை மக்களுக்காக நான் கடவுளுடன் பேசுகின்றேன் – பாதுக்கே அஜித்தவன்ச தேர்ர்

(UTV | கொழும்பு) –

பாதுக்கே அஜித்தவன்ச என்னும் பௌத்தப் பிக்கு, தான் கடவுளுடன் பேசுவதாக தெரிவித்துள்ளார்.  குறித்த பௌத்த பிக்கு, தொலைபேசி மூலம் மேற்கொண்ட உரையாடல் ஒன்று தற்பொழுது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது.  நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி நிலமைக்குத் தீர்வு காணும் நோக்கில் கடவுளுடன் பேச்சுவார்த்தையை நடத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கடவுளுடன் அடிக்கடி தான் பேசுவதாகவும் கடவுளிடம் கூறி மழையைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் உடவலவ பிரதேசத்திற்கு மழையை பெற்றுக் கொடுப்பதற்காகத் தான் அந்தப் பகுதிக்குச் செல்ல உள்ளதாகவும் அங்கு சென்று கடவுளிடம் வேண்டி மழையைப் பெற்றுக் கொடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இன்னும் இரண்டு ஜென்மங்களில் தான் கடவுளாக மாற உள்ளதாகத் தெரிவித்துள்ள பௌத்த பிக்கு, அதற்காக பிரார்த்தனை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Taminwin

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முடிவு

கடினமான நேரத்தில் இலங்கைக்கு உதவுவதாக IMF உறுதி

துறைமுக நகர சட்டமூலம் தொடர்பான மனுக்கள் மீதான பரிசீலனை ஆரம்பம்