உள்நாடு

அக்கரைப்பற்றில் கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு !

(UTV | கொழும்பு) –

அக்கரைப்பற்று ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் அக்கரைப்பற்று பிரதேச செயலக முஸ்லிம் கலாசார அலுவல்கள் பிரிவு இணைந்து ரமழான் மாதம் அக்கரைப்பற்று பெரியபள்ளிவாசலில் நடாத்திய “Blessed Ramadhan students’ programme” கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அக்கரைப்பற்று பிரதேச செயலக முஸ்லிம் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எச்.எம்.முக்தார் ஹுசையினின் ஒருங்கிணைப்பில் அக்கரைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இந் நிகழ்வு இடம்பெற்றது.

அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ரீ.எம்.எம். அன்சாரின் வழிகாட்டலில் உதவி பிரதேச செயலாளர் ராசித் யஹ்யா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கற்கை நெறியின் முடிவில் 49 மாணவர்கள் சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வின் அதிதிகளாக பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம். தமீம், வலயக் கல்வி அலுவலக உதவிபணிப்பாளர் எம்.எம். சித்தி பாத்திமா, சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.ஜே.எம். நிஹ்மதுள்ளாஹ், கோட்டக் கல்விப் பணிப்பாளர்எம்.எம். உவைஸ் அக்கரைப்பற்று ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் தலைவர் எஸ்.எம்.சபீஸ், செயலாளர் எம்.பி.அப்துல் ஹமீட், நிர்வாக கிராம உத்தியோகத்தர் ஏ.எல்.தாஹிர், கலாசார உத்தியோகத்தர்களான ஏ.எல்.தெளபீக், ஐ.எல். றிஸ்வான், என். நவப்பிரியா, மற்றும் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் எம்.எச். ஜெய்னுதீன், முஸ்லிம் கலாசார உத்தியோகத்தர் எம்.ஏ.எம். இப்றாலெப்பை, மத்தியஸ்த சபை உத்தியோகத்தர் எம்.எம்.எம்.ஹமீட், பல் நோக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.சங்கீதன், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் இஸ்மத், அந்நூர் நிறுவன செயற்பாட்டாளர் எம்.ஏ.எம். ஜனூஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

அத்துடன் மேற்படி நிகழ்வை நடாத்துவதற்கு அனுசரணை வழங்கிய அக்கரைப்பற்று பறகத் பவுன்டேஷன் நிறுவனர்களான வி.ஏ.பைசால், வி.ஏ. நைசல், வர்த்தக சங்க தலைவர் ஏ.எம். அப்துஸ் ஸலாம், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.முஸாதிக், பல்நோக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.சி.ஜலால்தீன், வர்த்தகர் ஜே.எம். அனஸ் உள்ளிட்ட வளவாளர்கள், பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள், போன்ற பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தேர்தல்கள் அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல்

நாளை சுகயீன விடுமுறை போராட்டம்.

தீவிரவாத அச்சுறுத்தல் தொடர்பான செய்திகள் உண்மை இல்லை