(UTV | கொழும்பு) –
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி புதன்கிழமை (09.08.2023) மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.
கடந்த யுத்த காலத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி வடக்கு, கிழக்கில் கவனயீர்ப்புப் போராட்டங்கள் உறவுகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் அம்பாறை மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தமது இரத்தச் சொந்தங்களுக்கு நீதி கோரி இன்றுடன் 2000 நாட்கள் பூர்த்தியாகுவதையொட்டி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்தினர்.
வடக்கு – கிழக்கு இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්