(UDHAYAM, COLOMBO) – வட கொரியாவினால் நேற்று சோதனை செய்யப்பட்ட ஏவுகணை புதிய ரக ரொக்கட்டை கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரிய நிறையை கொண்ட அணு ஆயுதங்களை காவிச் செல்லக்கூடியது திறனைக் கொண்டது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஏவுகணை 2000 கிலோ மீட்டர் பயணித்து மேற்கு ஜப்பான் கடற்பிராந்தியத்தில் வீழ்ந்துள்ளது.
இந்த புதிய ரக ஏவுகணை கண்டம் விட்டு கண்டம் பாயும் வலுவை கொண்டது என வட கொரியா அறிவித்துள்ளது.
இந்த வருடத்தில் வட கொரியா தொடர்ச்சியாக பல ஏவுகணை சோதனையில் ஈடுபட்டது.
சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஏவுகணைகள் அனைத்துமே வெற்றியை பெறாத போதிலும், சர்வதேச ரீதியாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளை, அவசரமாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையினை கூட்டும்படி அமெரிக்காவும் ஜப்பானும் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.