உள்நாடுசூடான செய்திகள் 1

SMS அனுப்பும் பசில் ராஜபக்ஷ!

(UTV | கொழும்பு) –

கட்சியை பொறுப்பேற்று தலைமைத்துவ செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவால் புதிய கூட்டணிக்கு ஆதரவளிக்கும் எம்.பி.க்களுக்கு செய்திகள் அனுப்பப்பட்டு வருவதாக அந்த குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் புத்தளம் மாவட்ட உறுப்பினர் ஒருவர் தெரிவிக்கிறார்.

புதிய கூட்டணியின் அரசியல் நடவடிக்கைகளுக்கு நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள எம்.பி.க்களின் பங்களிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பசில் ராஜபக்ச இவ்வாறு செய்தி அனுப்புவதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பசிலைச் சுற்றி தற்போது நாடாளுமன்றத்தில் 20க்கும் குறைவான உறுப்பினர்களே எஞ்சியுள்ளனர் என்பதை மேற்கண்ட வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

அண்மையில் நடைபெற்ற தொகுதிக் குழுவில் உரையாற்றிய எம்.பி.க்கள் குழுவைக் காணும் போது மிகவும் வருத்தமாக இருப்பதாகவும் குறித்த உறுப்பினர் மேலும் தெரிவிக்கின்றார்.

இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை அறிய இங்கு அழுத்துக

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பேராயரின் அழைப்பை இலங்கை முஸ்லிம் கவுன்சில் ஆதரித்தது

எதிர்வரும் 6 ஆம் திகதி தபால் நிலையங்களில் சேவைகள் இடம்பெறாது

சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஆசிரியர்கள், அதிபர்கள்!!