வகைப்படுத்தப்படாத

நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் அனைத்து மக்களினதும் பொருளாதார சமூக வளர்ச்சிக்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டுகிறது – பிரதமர்

(UDHAYAM, COLOMBO) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள சமகால நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் இலங்கையின் முக்கிய இரு அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. இதன் மூலம் அனைத்து மக்களினதும் பொருளாதார சமூக வளர்ச்சிக்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டுவருகிறது என்று பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இதற்கு அமைவாக இந்து சமுத்திரத்தை பொருளாதார கேந்திரமாக மேம்படுத்துவதில் நாம் ஆர்வத்துடன் செயல்பட்டுவருகின்றோம் என்றும் பிரதமர் கூறினார்.

சீனாவின் பீஜிங் நகரில் நேற்று ஆரம்கமான ஒரே கரையோரம் – ஒரே பாதை மாநாட்டின் உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அனைத்து நாடுகளுடனும்  உறவுகளை வலுப்படுத்தி  இந்து சமுத்திரத்தின் பொருளாதாரக் கேந்திரமாக இலங்கையை முன்னெடுப்பதே எமது நோக்கம் என்றும் அங்கு சுட்டிக்காட்டினார்.

பல தசாப்தங்களுக்குப் பின்னர் முதல் தடவையாக பூகோளப் பொருளாதாரம் மீண்டும் ஆசியாவை கேந்திரப்படுத்தியுள்ளது என்றும் கூறினார்.

அமைதியான – இராணுவத் தொடர்பற்ற உறவை வளர்த்துக் கொள்வதும் தடைகளின்றி பல்துறை வர்த்தகம் மற்றும் வாணிப நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதை உறுதிப்படுத்தவும் இது பெரிதும் உதவும் வகையில்யில் இந்து சமுத்திரத்தின் நிரந்தர சமாதானமும் நிலையான தன்மையும் இதற்கு சாதகமாக அமைந்துள்ளது என்று சுட்டிக்காட்டிய பிரதமர் ரணில்விக்கிரமசிங்க பிராந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கும், முன்னேற்த்துக்கும் அடித்தளமாக இந்து சமுத்திரத்தின் சுதந்திர கப்பல் பயணம் அமைந்துள்ளது என்றும் தெரிவித்தார்.

Related posts

ජ්‍යෙෂ්ඨ පොලිස් අධිකාරීවරුන් 9ක් DIG තනතුරට

முறிப்பு பகுதியில் விபத்து ஒருவர் பலி

இஸ்ரேல் பொதுத் தேர்தலில் வெற்றியாளர் தொடர்பில் குழப்பம்…