(UTV | கொழும்பு) –
நாட்டில் தமிழர்களின் பிரதேசங்களை பௌத்த இடங்களாக பிரகடனப்படுத்துவது வேதனைக்குரியவிடயம் என என இந்து சமய சங்கங்கள் மற்றும் அறக்கட்டளைகளின் கூட்டமைப்பு விசனம் தெரிவித்துள்ளது.
கீரிமலை புனித தீர்த்தக் கேணியை தொல்லியல் சின்னமாக பிரகடனப்படுத்தி, புத்தசாசன அமைச்சினால் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையின் பிரசித்தி பெற்ற பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாக விளங்கும் கீரிமலை நகுலேச்சர ஆலயத்தின் தீர்த்த கேணியாகவும் கீரிமலை புனித தீர்த்தம் உள்ளது.
இவ்வாறு தமிழர்களின் பாரம்பரிய வரலாற்று சிறப்புமிக்க இடங்களை பௌத்த இடங்களாக பிரகடனப்படுத்துவது வேதனைக்குரியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්