உள்நாடு

சரக்கு தொடருந்தில் பாய்ந்து இளம் பெண் ஒருவர் தற்கொலை!

(UTV | கொழும்பு) – 

கண்டியில் இருந்து பதுளை நோக்கி சென்ற சரக்கு தொடருந்தில் பாய்ந்து இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் இன்று (09.08.2023) காலை இடம்பெற்றுள்ளது. தலவாக்கலை டயகம பிரதேசத்தில் வசித்து வந்த கணபதி அனுஷா தர்ஷனி என்ற 28 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த யுவதி ஹட்டனில் உள்ள தனியார் நிதி நிறுவனமொன்றில் பணியாற்றியவர் என தெரியவந்துள்ளது.   பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் இந்த யுவதிஇ இளைஞர் ஒருவருடன் 5 வருடங்களாக காதல் தொடர்பு வைத்திருந்ததாக தெரியவந்துள்ளது. அதன்படிஇ இன்று காலை தன்னை வந்து சந்திக்குமாறு உயிரிழந்த யுவதி இளைஞனுக்கு தொலைபேசியில் தெரிவித்ததாகவும்இ அதற்கு அவர் மறுத்ததால் ஆத்திரமடைந்து அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யுவதியின் சடலம் அவரது காதலனால் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும்இ பிரேத பரிசோதனைக்காக சடலம் டிக்கோயா-கிளங்கன் ஆரம்ப வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
க.கிஷாந்தன்

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரிஷாதின் கைதும் ராஜபக்ஷவின் கொடூர ராணுவ முகமும்

மேலும் ஒருவருக்கு கொரோனா; 416 ஆக உயர்வு [UPDATE]

இலங்கையில் – பலஸ்தீனுக்காக கண்கலங்கி பேசியவர்தான் ஈரான் ஜனாதிபதி! (சிறு அறிமுகம்)