உள்நாடுசூடான செய்திகள் 1

“கெளரவ நாமம், கெளரவம் பட்டங்களை நிறுத்த நடவடிக்கை” அமைச்சர் சுசில்

(UTV | கொழும்பு) –

கெளரவ நாமம், கெளரவ பட்டங்களை வழங்குவதற்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் மற்றும் ஜனாதிபதிக்கு மாத்திரமே சட்ட ரீதியில் அனுமதி இருக்கிறது.

வேறு நிறுவனங்கள் இவ்வாறான விருதுகளை வழங்குவதற்கு எந்த சட்ட ஏற்பாடுகளும் இல்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (08) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது புத்திக்க பத்திரண எம்.பி எழுப்பிய கேள்விக்கு  பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

புத்திக்க பத்திரண எம்.பி, குறிப்பிடுகையில்,

பேராசிரியர், டாக்கடர், கலாநிதி, வித்தியாஜோதி, வித்தியா கீர்த்தி, தேசபந்து, தேசகீர்த்தி, தேசமான்ய, விஷ்வகீர்த்தி மற்றும் தேசசக்தி போன்ற கெளரவ நாமங்கள் கெளரவ பட்டங்களை, பதவிகளை அளிப்பதற்கு அதிகாரம் கொண்டுள்ள அரச நிறுவனங்கள் யாவை என  என கேட்டதற்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்,

இது தொடர்பாக அவர் தொடர்ந்து பதிலளிக்கையில்,

கெளரவ நாமங்கள் கெளரவ பட்டங்களை, பதவிகளை அளிப்பதற்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் மற்றும் ஜனாதிபதியினால் மாத்திரமே சட்ட ரீதியில் அனுமதி இருக்கிறது.

பல்கலைக்கழகம் ஒன்று இவ்வாறான பதவி வழங்குவதாக இருந்தால் அது தொடர்பில் பின்பற்ற வேண்டிய நடைமுறை வதிகள் அங்கிய சுற்று நிருபம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால்  வெளியிடப்பட்டிருக்கிறது.

அதேபோன்று ஜனாதிபதியினால் பிரஜைகளுக்கு இவ்வாறான விருது வழங்க முடியும். இது தொடர்பில் சட்டம் இருக்கிறது. அவ்வாறு விருது வழங்குவதாக இருந்தால், அதற்காக பகிரங்க விண்ணப்பம் கோரி, அதனை அமைக்கப்படும் நிபுணர்கள் குழுவினால் பரீட்சித்து பார்த்து பார்த்து அனுமதிக்கப்பட வேண்டும் என என்ற நடைமுறைகள் இருக்கிறன.

இந்த இரண்டு முறைகள் அல்லாமல் வேறு எந்த நிறுவனங்களுக்கும் இவ்வாறு விருது வழங்க சட்டத்தில்  குறிப்பிடப்பட வில்லை. என்றாலும் சில நிறுவனங்கள் அமைப்புகளை நிறுவி விருது வழங்கி வருகின்றன. இது நிறுத்தப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு என்றார்.

இதன்போது எழுந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இவ்வாறு கெளரவ பட்டங்கள் வழங்கப்படுவது சட்ட விராேதமாகும். கெளரவ பதவிகளை ஜனாதிபதிக்கு மாத்திரமே வழங்க முடியும். ஆனால் இன்று  15,20 ஆயிரம் என பணம் வழங்கி அவர்களுக்கு தேவையான கெளரவ பட்டங்களை வழங்க நாடுபூராகவும் பல நிறுவனங்கள் இருக்கின்றன. தேசத்துராேகிகளும் இவ்வாறு பணம் வழங்கி தேசபிமானி என பட்டம் பெற்றுக்கொண்டு செயற்படுகி்ன்றனர்.

அதனால் இதனை நிறுத்த வேண்டும். பாரிய தொழிலாக இது தற்போது நாட்டில் இடம்பெறுகிறது என்றார்.

இதற்கு அமைச்சர் சுசில் பதிலளிக்கையில், எதிர்காலத்தில் இவ்வாறான விருது வழங்குவதை தடுக்கும் வகையில் பாராளுமன்றத்துக்கு சட்டமூலம ஒன்றை கொண்டுவர நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஷானி CID இல் சுமார் 6 மணித்தியாலங்கள் வாக்குமூலம் [VIDEO]

கொவிட் அச்சுறுத்தலுக்கு பின்னர் நாட்டை வந்தடைந்த சுற்றுலாப்பயணிகள்

ஹிருணிகாவுக்கு எதிராக முஸம்மிலின் மகன்: திகதி வழங்கிய நீதிமன்றம்