உள்நாடுசூடான செய்திகள் 1

இனி தவணைப் பரீட்சைகள் வருடத்திற்கு ஒருமுறை மாத்திரமே- கல்வி அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

(UTV | கொழும்பு) –

இலங்கையில் எதிர்வரும் 2024ஆம் ஆண்டு முதல் அனைத்து பாடசாலைகளிலும் தவணைப் பரீட்சைகளை வருடத்திற்கு ஒருமுறை மாத்திரம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

இந்த தீர்மானமானது ஒவ்வொரு பாடசாலையிலும் முதலாம் தரம் முதல் உயர்தரம் (தரம் 13) வரை நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை ஒவ்வொரு பாசாலையிலும் ஒரு வருடத்திற்கு மூன்று தவணைப் பரீட்சைகள் நடத்தப்பட்டு வந்தன.

இந்த நிலையில் பாடசாலை மாணவர்களுக்கான பாடத்திட்டம் மற்றும் பாடசாலையின் சுமையை குறைக்கும் வகையில் வருடத்திற்கு ஒரு முறை தவணைப் பரீட்சை நடத்துவதற்கு கல்வி அமைச்சர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நெதன்யாகு காசாவிற்கு போர் அழைப்பு விடுத்தது ஒரு தவறு: பைடன்

இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரத்தில் மேலும் இரு கடற்படையினர் கைது

பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டபொலிஸ் உத்தியோகத்தர் மீண்டும் பணியில்…