உள்நாடுசூடான செய்திகள் 1

நபிகள் நாயகத்தின் வாரிசு ஜீலானி இலங்கை விஜயம்- உலமா சபை சந்தித்து பேச்சு

(UTV | கொழும்பு) –

முஸ்லிம்கள் இயக்க மற்றும் கருத்து வேறுபாடுகளை துறந்து சகோதரத்துவத்துடன் பயணிக்க வேண்டும்.

-அஷ்ஷைக் அஃபீபுத்தீன் அல் ஜீலானி-

2023.08.03 ஆம் திகதி காதிரிய்யா தரீக்காவின் ஆன்மிகத் தலைவரான அஷ்-ஷைக் அஃபீபுத்தீன் அல் ஜீலானி அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுடன் உத்தியோகபூர்வ சந்திப்பொன்றை மேற்கொண்டார்கள்.

உலகளவில் 100 மில்லியனுக்கும் அதிகமானவர்களால் பின்பற்றப்படும் ஆன்மிக அமைப்பான காதிரிய்யா தரீக்காவின் ஸ்தாபகர் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் 26 வது நேரடி வாரிசான அஷ்-ஷைக் அஃபீபுத்தீன் அல் ஜீலானி அவர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களது குடும்பத்தினை சேர்ந்தவர்களுமாவார்கள்.

ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன் இஸ்லாமியர்கள் இயக்க மற்றும் கருத்து வேறுபாடுகளைத் துறந்து சகோதரத்துவத்துடனும், ஒற்றுமையுடனும் பயணிக்கவேண்டுமெனவும் இமாமவர்களால் வலியுறுத்தப்பட்டது.

மேலும் இலங்கை முஸ்லிம்களின் வரலாறு தொன்மைமிக்கதாக காணப்படுவதோடு இலங்கை முஸ்லிம்கள் அன்றும், இன்றும், என்றும் நாட்டின் நலனுக்காக பாடுபடக்கூடியவர்களாகவே திகழ்ந்திருக்கிறார்கள் என்பதையும் இமாமவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.

குறித்த சந்திப்பில் ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்ஷைக் முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி, பொதுச் செயலாளர் அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித், பொருளாளர் அஷ்ஷைக் கலாநிதி ஏ.ஏ. அஸ்வர் மற்றும் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஊழலை ஒழிப்பது அரசின் முக்கிய பொறுப்பு

பேரூந்துக்கான புதிய பயணக் கட்டண விபரங்கள்

ராஜிதவுக்கு எதிரான மனு விசாரணை செவ்வாயன்று