உள்நாடு

LPLயில் தேசிய கீதத்தை பிழையாக பாடிய, பாடகி மீதான விசாரணை ஆரம்பம்!

(UTV | கொழும்பு) –

தேசிய கீதத்தை திரிபுப்படுத்தி பாடிய குற்றச்சாட்டு தொடர்பில் பிரபல பாடகி ஓமாரா சிங்கவன்சவிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதற்கமைய ஓமாரா சிங்கவன்சவிடம் இன்றைய தினம்(02.08.2023) விசாரணை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விவகாரம் தொடரில் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக அரச நிர்வாக மற்றும் சுதேச விவகார அமைச்சிக்கு ஓமாரா இன்று அழைக்கப்பட்டுள்ளார்.

மேலும் குறித்த விடயம் தொடர்பில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகமும் ஓமாராவிடம் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்ள உள்ளது.

அண்மையில் எல்.பி.எல் டீ20 கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஆரம்ப நிகழ்வின் போது ஓமாரா தேசிய கீதத்தை பாடியிருந்தார்.

வித்தியாசமான முறையில் தீரிபுபடுதிய வகையில் தேசிய கீதத்தை பாடியதாக ஓமாரா மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன அரச நிர்வாக அமைச்சுக்கு உத்தரவிட்டிருந்தார்.

இதன் அடிப்படையில் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஓமார தேசிய கீதத்தை பாடிய விதம் அரசியல் சாசனத்திற்கு முரணான வகையில் அமைந்ததா என்பது குறித்து விசாரணை நடத்தப்படவுள்ளது.

இந்நிலையில் விசாரணை அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்னர் இது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அட்மிரல் வசந்த கரன்னாகொட தொடர்பான ஆவணங்கள் ஆணைக்குழுவுக்கு

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு [UPDATE[

வானிலை : ஒரு குறைந்த அழுத்தம் விருத்தியடையும் சாத்தியம்