உள்நாடு

50 மின்சார பேருந்துகளை இறக்குமதி செய்ய போக்குவரத்து அமைச்சு அனுமதி!

(UTV | கொழும்பு) –

50 மின்சார பேருந்துகளை இறக்குமதி செய்ய போக்குவரத்து அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் மானியத்துடன் பேருந்துகள் இறக்குமதி செய்யப்படும் என சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பு நகருக்குள் மின்சார பஸ்களை இயக்குவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை கடந்த மாதம் அனுமதி வழங்கியது.

வெளியேறும் புகையால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் அதிகரித்து வரும் எரிபொருள் விலையின் தாக்கம் ஆகிய இரண்டையும் குறைக்கும் முயற்சியில் இந்த முன்மொழிவு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இந்த பேருந்துகள் இயக்கப்படும் எனவும், ஏனைய பிரதேசங்களின் புவியியல் நிலைமைகளின் அடிப்படையில் விரிவுபடுத்தப்படும் எனவும் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

உலக நாடுகளுக்கு கடன் வழங்கும் நாடாக இலங்கை மாறும்-வஜிர

சில சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி

இரண்டு மணி நேரத்தில் மின் வெட்டு சரி செய்யப்படும்