(UTV | கொழும்பு) –
கொழும்பு லேடி றிஜ்வே மருத்துவமனையில் சிறுநீரக சத்திர சிகிச்சையின் போது மருத்துவர்களின் கவனயீனத்தால் 2 சிறுநீரகங்களையும் இழந்த நிலையில், உயிரிழந்த பாலகன் முஹம்மத் ஹம்தியின் ஜனாஸா இன்று 30 ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை இலங்கை நேரம் முற்பகல 11.35 மணிவரை நல்லடக்கம் செய்யப்படவில்லை. என தெரியவருகிறது
ஜனாஸா ஹம்தியின் பெற்றோர்களிடம் இதுவரை கையளிக்கப்படாத நிலையில் அதுதொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
ஹம்தியின் பெற்றோர்களிடம் பொலிஸார், நேற்று சனிக்கிழமையும் (29) விரிவான விசாரணைகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 27 ஆம் திகதி, வியாழக்கிழமை ஹம்தி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த சிறுவனுக்கு நடந்த அநீதிக்கு நீதி கிட்டுமா? அரசியவாதிகள் களமிறங்குவார்களா?
(ஜமு)
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්