(UTV | கொழும்பு) –
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஓமனியாமடு பிரதேசத்தில் தண்ணீர் பவுசர் வாகனத்தில் சைக்கிளில் பிரயாணித்த 6 வயதான சிறுவன் ஒருவன் சிக்கிய உயிரிந்தார். இதனையடுத்து அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டது. அந்த பதற்றம் தணிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சனிக்கிழமை (29) மாலை 6.30 மணிக்கு சம்பவம் இடம்பெற்றது. சம்பவத்தை அடுத்து சாரதியும் உதவியாளரும் அவ்விடத்தில் இருந்து தப்பியோடினர். எனினும், இருவரை மடக்கிபிடித்த பொதுமக்கள் தண்ணீர் பவுசருக்கு தீ வைத்தனர்.
இதனையடுத்தே அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
ஓமனியாமடு 2ம் பரம்பரை பகுதியைச் சேர்ந்த 6 வயதுடைய முகமட் சலீம் முகமட் ருஷ்கி என்ற சிறவனே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த பிரதேசத்திலுள்ள மண் களுஞ்சியபடுத்தும் (யாட்டிற்கு) மண்ணை கழுவுவதற்காக தண்ணீர் பவுஸர் மூலம் தண்ணீர் கொண்டு சென்று தினமும் வழங்கிவரும்.
ஓமனியாமடு 2ம் பரம்பரை பகுதி வீதியில் தண்ணீர் பவுசரை பின்னோக்கி செலுத்தியபோது, சைக்கிள் சிக்கியுள்ளது. அந்த சைக்கிளை 10 வயது அண்ணன் செலுத்தி வந்துள்ளார். எனினும், சம்பவத்தில் அவர் உயிர் தப்பிவிட்டார். தப்பி மரணமடைந்தார்.
இதனையடுத்து பவுசரின் சாரதி மற்றும் உதவியாளர் அங்கிருந்து தப்பி ஓடியதையடுத்து ஆத்திரமடைந்த பிரதேச மக்கள் தண்ணீர் பவுசரை தீ வைத்தனர். பவுசர் முற்றாக தீயில் எரிந்து சாம்பலாகியது. இதனால், அங்கு பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது.
தப்பியோடிய சாரதி மற்றும் உதவியாளர் இருவரையும் பொதுமக்கள் மடக்கி பிடித்ததுடன் இருவரும் மதுபோதையில் இருந்துள்ளனர்.
இந்த நிலையிவல் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் நிலமையை கட்டுபாட்டிற்கு கொண்டுவந்ததுடன் மடக்கி பிடித்த சாரதி மற்றும் உதவியாளர்களை கைது செய்ததுடன் உயிரிழந்த சிறுவனின் சடலத்தை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
இதேவேளை குறித்த மண்யாட் அனுமதி எதுவும் இன்றி சட்டவிரோதமாக இயங்கி வருவதாகவும் இதற்கு எதிராக பிரதேச மக்கள் சம்மந்தப்பட் அதிகாரிகளின் கவனத்திற்கு பலமுறை கொண்டு வந்தபோதும் எதுவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் பொதுமக்கள் கடும் விசனம் தெரிவித்தனர்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්