உள்நாடு

மகளின் முதலிரவன்று தந்தை கைது! 9வருடத்திற்கு பின் சிக்கினார்

(UTV | கொழும்பு) –

திருமணத்தின் பின்னர் முதலிரவு அன்று கணவனுக்கு ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து, அப்பெண்ணின் தந்தை 9 வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் மொனராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பூவக்கொட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

தன்னுடைய மூத்த மகளை 13 வயதில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்றக் குற்றச்சாட்டின் பேரிலேயே அப்பெண்ணின் தந்தை கடந்த 27ஆம் திகதியன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

13 வயதில், அச்சிறுமியின் ​தாய், தனது கணவனிடம் சிறுமியை விட்டுவிட்டு, வேறு ஒருவருடன் குடும்ப நடத்த சென்றுவிட்டார்..

அச்சிறுமி, தனது தந்தையுடன் இருந்துள்ளார். இந்நிலையில், 2013 ஆம் ஆண்டு பிற்பாதியில் இருந்து 2013 ஆண்டு நிறைவடையும் வரையிலும் அச்சிறுமியின் தந்தை, தனது மகளை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.

இதுதொடர்பில் தந்தையின் அம்மாவிடம் (ஆச்சி) சிறுமி தெரிவித்ததை அடுத்து, சில காலம் அவ்வீட்டில் வந்து ஆச்சி தங்கியிருந்துள்ளார். அதன்பின்னர், தந்தையின் துன்புறுத்தல் நின்றுவிட்டது.

இந்நிலையில், உறவினர்களால் அப்பெண்ணுக்கு திருமணம் பேசப்பட்டுள்ளது. திருமணத்துக்குப் பின்னர் கணவனுடன் பாலியல் உறவு வைத்துள்ளார். அதன்பின்னர் ஏற்பட்ட முரண்​பாட்டை அடுத்தே, இன்றைக்கு 9 வருடங்களுக்கு முன்னர், தந்தையால் தான் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட விடயம் வெளிச்சத்துக்கு வந்தது.

இது தொடர்பில் கணவனும், மனைவியும் பொலிஸில் செய்த முறைப்பாட்டு அமைய, 49 வயதான தந்தை ஒன்பது வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை சியம்பலாண்டுவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

புதிய வேலைத் திட்டத்துடன் களமிறங்கும் மைத்திரி கட்சி

அறுகம் குடாவிலிருந்து இஸ்ரேலியர்கள் உடனடியாக வெளியேறவேண்டும்

editor

அரசாங்கத்தின் நல்ல விடயங்களுக்கு ஆதரவு வழங்குவோம், தவறை சுட்டிக்காட்டுவோம் – சஜித்

editor