உள்நாடுசூடான செய்திகள் 1

காத்தான்குடி கோட்ட கல்வி பிரச்சினையை தீர்த்த செந்தில் தொண்டமான், ஹிஸ்புல்லா!

(UTV | கொழும்பு) –

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை முன்னாள் அமைச்சரும், ஆளுநருமான கலாநிதி எம். எல். எம். ஏ. ஹிஸ்புல்லா, திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நேற்று மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டார்.

இந்தச் சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பில் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

காத்தான்குடி கோட்ட கல்வி அலுவலகர் பதவி வெற்றிடம் ஏற்பட்டிருந்த நிலையில், அந்த பதவிக்கு இலங்கை கல்வி சேவை தரம் 3 தகுதியுடையவர்கள் இல்லாமையால், தற்காலிக அதிகாரியாக இலங்கை அதிபர் சேவையின் தரம் 1 தகுதியை கொண்ட எம். எம்.கலாவுதீன் நியமிக்கப்பட்டிருந்தார்.
இலங்கை கல்வி சேவை தரம் 3 படிப்பை நிறைவு செய்திருந்த ஏ. ஜீ. மொஹமட் ஹக்கீமுக்கு கோட்ட கல்வி அலுவலகர் நியமனம் வழங்கப்பட்டு, தற்காலிக அதிகாரியாக நியமிக்கப்பட்ட எம். எம். கலாவுதீனுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் எம். எம்.கலாவுதீனுக்கு 58 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பாடசாலைக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதால் இவரின் வயதை அடிப்படையாக கொண்டும், மனிதாபிமான ரீதியிலும் அருகில் உள்ள ஒரு பாடசாலையில் நியமனம் வழங்க வேண்டுமென முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா, ஆளுநர் செந்திலிடம் கோரிக்கை விடுத்தார்.

கோரிக்கையை ஏற்று, கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.ஜீ. திஸாநாயக்கவிடம் இவ்விடயம் தொடர்பாக ஆராய்ந்து, கலாவுதினை அருகில் உள்ள பாடசாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு பணிப்புரை விடுத்ததுடன், கல்வி அமைச்சின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக இடமாற்றத்திற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக ஆளுநர் ஹிஸ்புல்லாவிடம் உறுதியளித்தார்.

நூருல் ஹுதா உமர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கோட்டை மேம்பாலம் சேதமடைந்துள்ளதாக மக்கள் விசனம்

ஹோமாகம பகுதியில் ஒரு தொகை வெடிபொருட்கள் மீட்பு

காசல்ரீ நீர் தேக்கத்தில் 1 லட்சம் கிராப் மீன் குஞ்சிகள் விடப்பட்டது