உள்நாடுசூடான செய்திகள் 1

எமது அறிவுரைகளை கவனத்தில் கொள்ளாமையே கோட்டபாய வீடு செல்ல காரணம்

(UTV | கொழும்பு) –

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வீடு செல்வதற்கு, தமது சில அறிவுரைகளை கவனத்தில் கொள்ளாமையே காரணம் என  பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். சிங்கள தொலைக்காட்சி சேவை ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும், எதிர்காலத்தில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தாம் கூறியதாகவும் கூறியுள்ளார். எரிபொருள், மருந்து, நிலக்கரி, எரிவாயு போன்ற அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு டொலர்களை சேமித்துக்கொள்ளுமாறும் அத்தியாவசியமற்ற பொருட்களை வரையறுக்குமாறும் தாம் கோரியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை சூத்திரம், வரையறுக்கப்பட்ட அடிப்படையில் எரிபொருள் விநியோகம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட இரண்டு யோசனைகளையும் அப்போதைய நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச நிராகரித்தார் என மேலும் குறிப்பிட்டுள்ளார். அன்று தம்மால் முன்வைக்கப்பட்ட முன்வைக்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட யோசனைகளை தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடைமுறைப்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் தமது யோசனைகளை நிராகரித்த கோட்டாபய ராஜபக்ச வீடு செல்ல நேரிட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

முதலாம் தரத்தில் இருந்து பிள்ளைகளுக்கு ஆங்கிலம் கற்பிக்கும் பணி

வெடிகந்த கசுன் விளக்கமறியலில்

எதிர்வரும் 17ம் திகதி அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை