உள்நாடு

கியூ.ஆர்  முறைமையிலான எரிபொருள் ஒதுக்கீடு அடுத்த மாதம் மேலும் அதிகரிக்கப்படும்!

(UTV | கொழும்பு) –

கியூ.ஆர்  முறைமையிலான எரிபொருள் ஒதுக்கீடு அடுத்த மாதம் மேலும் அதிகரிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இன்று வியாழக்கிழமை (20) நடைபெற்ற கூட்டத்தில்,  இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால்  அடுத்த ஆறு மாதங்களுக்கான எரிபொருள்   திட்டங்கள் மற்றும் விநியோகம் தொடர்பில்  மீளாய்வு செய்யப்பட்டதாக அமைச்சர் தனது டுவிட்டரில்  தெரிவித்தார்.

இதன்படி, எரிபொருள் இறக்குமதித் திட்டங்கள், சுத்திகரிப்புச் செயற்பாடுகள், சுத்திகரிப்பு நிலையத்தை மேம்படுத்துவதற்கான முன்மொழிவுகள், கியூ.ஆர் ஒதுக்கீடு உட்பட பல விடங்கள் இந்தக்   கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

இதனையடுத்தே, உரிய மதிப்பீடுகளின் முடிவில், தற்போதுள்ள எரிபொருள் கியூ. ஆர்   ஒதுக்கீடு முறைமையின்  கீழ்  ஆகஸ்ட் மாதத்தில் அதிகரிக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

1,700 ரூபாய் சம்பள அதிகரிப்பு வர்த்தமானி ரத்து.

பல்கலைக்கழகங்களை மீள திறப்பது குறித்து தீர்மானம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் இரு இலங்கையருக்கு கொரோனா தொற்று