வகைப்படுத்தப்படாத

மொரவௌ பிரதேச செயலகத்திற்கு சிறந்த வெசாக்கூடு தயாரிப்பு விருது

(UDHAYAM, COLOMBO) – ஜக்கிய நாடுகளின் 14வது சர்வதேச வெசாக் தினத்தை முன்னிட்டு பக்தி கீதங்கள் மற்றும் போட்டி நிகழ்ச்சிகள் என்பன திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமாரவின் தலைமையில் நடைபெற்றது.

திருகோணமலை மாவட்ட செயலகத்தினால் மாவட்ட செயலக வளாகத்தில் கடந்த சனிக்கிழமை பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலக பிரிவுகளிற்கிடையே வெசாக்கூடு தயாரிப்பு போட்டி நடத்தப்பட்டது.

இந்த போட்டியில் முதலாம் இடத்தை மொரவௌ பிரதேச செயலகமும் இரண்டாம் இடத்தினை கோமரங்கடவெல பிரதேச செயலகம் மற்றும் மூன்றாம் இடத்தினை மாவட்ட செயலக கணக்கு கிளையும் முறையே பெற்றுக்கொண்டன.

அதேபோன்று பக்தி கீதங்கள் போட்டியில் முதலாம் இடத்தை கந்தளாய் சிறி பெரகும் சமய பாடசாலையும் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை தம்பலகாமம் அக்ரபோதி சமய பாடசாலையும் , பதவி சிறிபுற செத்சரன முதியோர் சங்கமும் பெற்றுக் கொண்டன.

வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் மற்றும் நினைவுச்சின்னங்களை மாவட்ட அரசாங்க அதிபருடன் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் சரத் அபேகுணவர்தன, திருகோணமலை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட அதிதிகள் வழங்கினர்.

Related posts

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவசர நிதி உதவியாக 10,000 ரூபா

Several Muslim Parliamentarians accepts former Ministerial portfolios

வெளிநாட்டவர்களுக்கான வீசா விண்ணப்பங்களை இணையவழியில் சமர்பிக்க அங்கீகாரம்!