(UTV | கொழும்பு) –
எமது UTVக்கு வழங்கிய செவ்யில் தொடர்பில் எழுந்துள்ள விமர்சனத்திற்கு யூசுப் முப்தி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
எம் அனைவரினதும் நல்ல முயற்சிகளை இறைவன் பொருந்திக் கொள்வானாக.
2023.07.12 ஆம் திகதியன்று UTV யில் ஒளிபரப்பான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சொல்லப்பட்ட சில கருத்துக்கள் குறித்து பல்வேறு வாத விவாதங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
உலமாக்களும் அறபுக் கல்லூரி விரிவுரையாளர்களும் பள்ளிவாயல் நிர்வாகிகளும் தமது பணியை திறம்படச் செய்வதற்கு பயிற்சி பெற வேண்டியதன் அவசியத்தை அங்கு வலியுறுத்தினேன். அக் கருத்தில் எந்தப் பிழையும் இல்லை என்று உறுதியாக நம்புகிறேன்.
ஆனால் ஏற்கெனவே பயிற்சிகள் பெற்ற, பெற்றுக் கொண்டிருக்கின்ற உலமாக்களையும் தமது பணியை திறம்படச் செய்யும் மஸ்ஜித் நிர்வாகிகளையும் அந்தக் கருத்து கவலையடைச் செய்திருக்கிறது என்பது எனக்கு வருத்தத்தைத் தருகிறது.
யார் மனதையும் காயப்படுத்தும் நோக்கிலோ, யாருடைய பணியையும் இழிவுபடுத்தும் நோக்கிலோ அக் கருத்துக்களைக் கூறவில்லை.
அதற்கு அல்லாஹ் சாட்சியாக இருக்கிறான். எனவே சமூக,சமயப் பணிகளில் ஈடுபடும் எவரும் (நான் உட்பட) தொடர்ந்தேர்ச்சியான பயிற்சிகளைப் பெற்றுக் கொள்வது எமது பணிகளை திறம்பட முன்னெடுக்க உதவும்.
நன்மையான விடயங்களில் பரஸ்பரம் ஒத்துழைப்புடன் பணி புரிய அல்லாஹ் எம் அனைவருக்கும் அருள்புரிவானாக.
முப்தி. யூஸுப் ஹனிபா
18.07.2023
முழு வீடியோ:
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්