வகைப்படுத்தப்படாத

ஜனாதிபதி – டெங்கு ஒழிப்பு செயலணி இன்று விசேட கலந்துரையாடல்

(UDHAYAM, COLOMBO) – டெங்கு நோய் வேகமாக பரவுவது தொடர்பாகவும் அந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடவும் டெங்கு ஒழிப்பு செயலணியை உடனடியாக ஒன்றுகூட்ட ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் டெங்கு ஒழிப்பு செயலணி ஜனாதிபதி தலைமையில் இன்று ஒன்றுகூடவுள்ளது.

2017ம் ஆண்டு இதுவரையில் நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 44,623 வரை அதிகரித்துள்ளதுடன், 115 மரணங்களும் இடம்பெற்றுள்ளன.

2014ம் ஆண்டு 47,246 டெங்கு நோயாளர்களும் 97 மரணங்களும் இலங்கையில் பதிவாகியுள்ளதுடன், இந்த நிலைமை 2015ம் ஆண்டு 29,777 நோயாளிகளும் 60 மரணங்களுமாகக் குறைப்பதற்கு சுகாதார மற்றும் நோய் தடுப்பு பிரிவுக்கு முடியுமாக இருந்தது.

மீண்டும் 2016ம் ஆண்டு டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 55,150 வரை அதிகரித்துள்ளதுடன், 90 மரண சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

மேலும் நோயாளர்கள் மற்றும் நுளம்புக்குடம்பிகள் தொடர்பான தரவுகளுக்கேற்ப கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல், புத்தளம், திருகோணமலை, மட்டக்களப்பு, இரத்தினபுரி, கேகாலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்கள் இடர் பிரதேசங்களாக அடையாளங் காணப்பட்டுள்ளன.

இந்த ஆபத்தான நிலைமையைக் கவனத்திற்கொண்டு டெங்கு பரவுவதை உச்ச அளவில் கட்டுப்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய உடனடித் தீர்வுகள் குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

பத்தரமுல்லைக்கு வர தேவையில்லை! 3 நாட்களுக்குள் வீட்டுக்கு வரும் கடவுச்சீட்டு

மனித உரிமை உயிர்ஸ்தானிகர் அதிருப்தி

நல்லாட்சியில் இப்படியானதொரு சம்பவம் நடந்திருக்கக்கூடாது