உள்நாடுசூடான செய்திகள் 1

மீண்டும் தமிழ் எம்பிக்களை அழைத்த ஜனாதிபதி : பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் குறித்து பேச்சு

(UTV | கொழும்பு) –

வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பில், பயங்கரவாதத் தடைச் சட்டமூலம் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடினார்.

ஐரோப்பிய ஒன்றிய முன்மொழிவுகளை, ஜூலை 18 ஆம் திகதி வரைபுக் குழு ஆராய உள்ளது. திருத்தங்கள் குறித்து ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுத்த பின்னர் சட்டமூலம் மீண்டும் வர்த்தமானியில் வெளியிடப்படும்.

ஊழல் ஒழிப்புச் சட்டம்,  எதிர்வரும் ஜுலை 19 ஆம் திகதி பாராளுமன்றக் குழுநிலையில்  திருத்தங்களுக்கு உட்படுத்தப்படும் என்றும், உயர் நீதிமன்றத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்களும் பரிசீலிக்கப்படும் என்றும் வடக்கு கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  தெரிவித்தார்.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இன்று சுகயீன விடுமுறை போராட்டத்தில்

பணம் அச்சிடப்பட்டதாக வெளியான செய்திகள் போலியானவை – விஜித ஹேரத்

editor

பொதுத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி சிலிண்டர் சின்னத்தில் போட்டி

editor