உலகம்

தகாத உறவு : விலகிய சபாநாகரும், பெண் எம்பியும் இராஜினாமா

(UTV | கொழும்பு) –

சிங்கப்பூரில் பாராளுமன்ற சபாநாயகரும், ஒரு பெண் பாராளுமன்ற உறுப்பினரும் இராஜினாமா செய்துள்ளனர்.  தகாத உறவு  வைத்திருந்தமை காரணமாக அவர்கள் பதவி விலகியுள்ளனர்.

சபாநாயகர் டான் சுவான் ஜின் மற்றும் செங்லி ஹுய் பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோரின் இராஜினாமாவை பிரதமர் லீ சியென் லூங் ஏற்றுக்கொண்டார்.

இதுதொடர்பாக பிரதமர் கூறும்போது,

மக்கள் செயல் கட்சியின் உயர்ந்த தகுதி மற்றும் தனிப்பட்ட நடத்தையை பேணுவதற்காக சபாநாயகர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரின் இராஜினாமா ஏற்று கொள்ளப்பட்டுள்ளது. அவர்கள் தகாத உறவில் இருந்தனர்.அதை கடந்த பெப்ரவரி மாதம் நிறுத்த சொன்ன பிறகும் அது தொடர்ந்தது. இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு சபாநாயகரிடம் கூறினேன். ஆனால் அது தொடர்ந்தபடியே இருந்தது. இதனால் அவர்களது இராஜினாமாவை ஏற்றுக்கொண்டேன் என்றார். டான் சுவான் ஜின் எழுதிய இராஜினாமா கடிதத்தில் தனது குடும்பத்தில் கவனம் செலுத்த அரசியலில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இஸ்ரேல்- ஈரான் தாக்குதலை கண்டிக்கும் அமெரிக்காவின் MP

கொரோனா பயத்தால் ஜேர்மன் அமைச்சர் தற்கொலை

மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து முதலிடம்