(UTV | கொழும்பு) – கம்பளை முஸ்லிம் வாலிபர் சங்கம் பத்து வருடங்களாக தனியார் நன்கொடைகள் மூலம் சமூக நலத்திட்டங்களை அமுல்படுத்தி இலங்கை சமூகத்தில் இனங்களுக்கிடையிலான ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்காக தன்னை அர்ப்பணித்து செயற்படும் உறுப்பினர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி ஆற்றி வரும் சேவையை பாராட்டும் மாபெரும் விழா , கம்பளை ரந்தெட்டிய ஸ்ரீ சுமனஜோதி வித்யாதன பிரிவெனா விகாரையில் நடைப்பெற்றது.
இதில் சமய, பீடாதிபதிகள் மற்றும் பிக்குகள், கத்தோலிக்க மதகுருமார்கள் மற்றும் இந்து மதகுருமார்கள், சிங்களம், தமிழ், முஸ்லிம், மற்றும் அனைத்து இன மக்களும் கலந்து கொண்டனர். கம்பளை ஸ்ரீ சுமணஜோதி பிரிவேன பரிவேனாதிக்ஷ ஓய்வுபெற்ற பரிவேனாதிபதி தேசிய கல்வி நிறுவகத்தின் முன்னாள் விரிவுரையாளர் அமரபுர ஆரியவங்ச சத்தம்யுத்திக மகா நிகாய கண்டி நுவரெலியா கோட்ட பிரதம சங்கநாயக கல்வி பதி கொத்மலை சுமணரதன தேரர்கள் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்து இருந்தனர்.
கௌரவிக்கப்பட்ட முஸ்லிம்கள் கண்கவர் ஊர்வலமாக வந்து காமினி தம்ம பாடசாலையின் பிள்ளைகள் வழங்கிய மலர் குவளைகளை எடுத்துச் சென்று புத்தர் விகாரையில் வைத்து வழிப்பாடுகளிள் ஈடுப்பட்டனர்.
மௌலவி அலாஜ் ஜிஃப்ரி உட்பட 12 முஸ்லிம்கள் கம்பளை பிரதான முஸ்லிம் மதகுருவாக ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலமாக அனைத்து மதத் தலைவர்களுடனும் இணக்கமாகச் செயற்பட்டு சமூகத்திற்குச் செய்த சேவைக்காக இங்கு கௌரவிக்கப்பட்டனர்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්