உள்நாடுசூடான செய்திகள் 1

விமான நிலையம் ஜனவரி மாதத்தில் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட உலகில் சிறந்த விமான நிலையமாக இயங்கும்- அமைச்சர் நிமல்

(UTV | கொழும்பு) –    இலங்கை விமான நிலையம் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட உலகில் சிறந்த விமான நிலையமாக இயங்கும். என விமான சேவைகள், கப்பல்துறை மற்றும் துறைமுக அபிவிருத்தி அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

இலங்கை  சிவில் விமான சேவைகள்  தினத்தினை முன்னிட்டு ஜூலை 15ஆம் தேதி கட்டுநாயாக்காவில் உள்ள சிவில் போக்குவரத்து விமான சேவைகள் நிலையத்தில் ஊடகவியலாளர்கள்  மாநாட்டில்  உரையாற்றும் போதே அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்

இத் திட்டத்தினால் இலங்கை விமான நிலையத்தில் தனது முகத்தை டிஜிட்டல் முறையில் பதிவு செய்து அவரது விசா விஷயங்கள், வங்கி முறைகள், உள்ளூர் ஹோட்டல்கள், போக்குவரத்து, மற்றும் அவரது சகல  பொதிகளை இலகுவாகப் பெறவும் குறுகிய நேரத்தில் இலகுபடுத்தல்   போன்ற சகல விடயங்கள் முன்னெடுக்கப்படும். .உலகில் உள்ள நாடுகளில்  துபாய். சிங்கப்பூர் நாடுகள் மட்டுமே டிஜிட்டல் மற்றும் சிவில் விமான சேவை உலக பாதுகாப்பு முறையில் விருத்தி பெற்றது அதே தரத்திற்கு வருவதற்கு எமது உலகளாவிய விமான சிவில் பாதுகாப்பு, சிக்னல் , விமான தரை ஓட்ட அபிவிருத்தி  பெட்ரோலியம் போன்றவற்றில் எதிர்காலத்தில் நாம் அபிவிருத்தி செய்தல் வேண்டும்.

எமது நாட்டில் கடந்த காலத்தில் ஏற்பட்ட பொருளாதார பிரச்சினை, கொவிட் 19 போன்ற விஷயங்களில் நமது விமான சேவைகள் பின்னடைவை பெற்றன. தற்பொழுது நாம் அதிலிருந்து விடுபட்டு சிறுக சிறுக மீள் வளர்ச்சியடைந்து வருகின்றோம்..

இலங்கை விமான நிலையம் இலங்கை அரசின் பங்குகளாக  50 வீதமாகவும், 49 வீதம் தனியார் கம்பனிக்கும் 1 வீதம் ஊழியர்கள் பங்கு எதிர்காலத்தில் பரினமிக்கும்.  ஜப்பான் நாட்டின் ஜயிக்கா உதவியுடன் விமான நிலைய சில அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.எமது விமான நிலைய ஊழியர்கள் விமான ஓட்டிகள் பொறியியலாளர்களின் எவ்வித இடைஞ்சலும் இன்றி 50 வீத சம்பள வழங்கினோம். ஆனால் கொவிட் காலத்தில் குவைத் நாடுகளில் கூட விமான ஊழியர்களை அகற்றினார்கள் தற்பொழுது மீள சேர்த்துக் கொள்வார்கள்  நாம் அவ்வாறு செய்யவில்லை.  நமது விமானங்கள் ஓடாவிடடாலும் நாம் சம்பளம் வழங்கினோம்.

தற்போது எமது நாட்டில் 69 வீதம் சர்வதேச விமான போக்குவரத்து  சீர்செய்யப்பட்டு  ஒழுங்கான முறையில் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. உலக நாடுகளில் கூட 69 வீதத்தில் விமான போக்குவரத்துகள் தற்பொழுது 96 வீதம் மீள் வருமானத்தினை அடைந்து வருகின்றது.

இலங்கையில் 215 விமான ஓட்டுனர்கள் இருந்தனர் அதில் ஒரு சிலர் தமது கூடிய சம்பளத்திற்கு வெளிநாடுகளுக்குச்சென்றுள்ளார்கள். அதனை எங்களால் நிறுத்த முடியாது. 5 எயார் லங்கா விமானங்கள் பழுதடைந்து தரித்து நிறுத்தப்பட்டுள்ளது. அதனை திருத்தி அமைப்பதற்கு வெளிநாட்டுக் கம்பெனிகள் இலங்கைக்கு வர வேண்டும்.

விமான நிலையத்தினை மீள கட்டமைப்புக்குரிய அமைச்சரவை அனுமதி பெறப்பட்டு அதற்கான கேள்வி கோரப்படும்..தற்பொழுது இந்தியன் விமானம் 7 நாட்களும் இலங்கை வருகின்றன அதனை விட மேலதிகமாக யாழ்ப்பாணம் விமான சேவை நடைபெறுகிறது. ஹம்பாந்தோட்டை விமான நிலையத்தினையும் நாம் பயன்படுத்துவதற்கு முயற்சிக்கின்றோம்.  அத்துடன் இரத்தமலானை விமான நிலையம் செயற்படுகின்றனத. எதிா்காலத்தில் உள்ளூர் விமான நிலையங்கள் மீள கட்டமைக்கப்படும். என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்

இந் நிகழ்வில் சிவில் விமான சேவை அதிகார சபையின் தலைவர் , பணிப்பாளர், விமான நிலையத்தின் தலைவர் உப தலைவர்களும் கலந்து கொண்டடினர்.

(அஷ்ரப் ஏ சமத்)

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

விற்பனை, காட்சிப்படுத்தல் மற்றும் பொதுப் பயன்பாட்டுக்கு தடை

பிரென்டிக்ஸ் : பதிவு செய்யாத ஊழியர்கள் கைது செய்யப்படுவர்

கேரள கஞ்சாவுடன் இருவர் கைது…