உள்நாடுசூடான செய்திகள் 1

குருந்தூர்மலை விவகாரம் : நீதித்துறைக்கே சவால் விடும் நிலை

(UTV | கொழும்பு) –

நீதித்துறைக்குச் சவால் விடும் வகையிலும் குருந்தூர்மலையைச் சிலர் பயன்படுத்த முற்படுகின்றனர் என்றும் இது நாட்டுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் செயலென நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், குருந்தூர்மலையில் வழிபடச் சென்ற தமிழ் மக்கள், பிக்குகள் – சிங்கள மக்கள் மற்றும் பொலிஸாரால் இடையூறு விளைவிக்கப்பட்டு திருப்பியனுப்பப்பட்டமை தொடர்பில் எழுப்பிய கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இது வெட்கித் தலைகுனிய வேண்டிய செயற்பாடு. இந்தப் பிரச்சினைக்குப் பின்னால் இருக்கும் குழுவினரை அடையாளம் காணவேண்டும். அந்தக் குழுதான் தமிழ் மக்களையும் – பௌத்த சிங்கள மக்களையும் முட்டி மோதவிட்டு வேடிக்கை பார்க்க எண்ணுகின்றது.

இது நாட்டுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் செயல். அனைத்துக்கும் விரைந்து இணக்கமான சூழலை ஏற்படுத்த வேண்டுமென தெரிவித்துள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

12 மொட்டு எம்பிகள், சஜித்துடன் இணையவுள்ளனர்!

எதிர்கட்சி தலைவர் சஜித் தலைமையில் விஷேட கலந்துரையாடல்

மதஸ்தலங்களுக்கு ரூ.5,000 பெறுமதியான உலர் உணவுகள் பொதி