(UTV | கொழும்பு) –
ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடம் நிறையவுள்ள நிலையில் அதனை கொண்டாடும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய வேண்டாம் என ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
சில அதிகாரிகள் கோரிக்கை விடுத்திருந்த போதும் பொதுமக்களின் பணத்தில் நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய வேண்டாம் என அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு மீளும் இந்த சந்தர்ப்பத்தில் பொது அல்லது தனியார் நிதியைப் பயன்படுத்தி விழாக்களை ஏற்பாடு செய்யக் கூடாது என்று கூறி ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 8வது நிறைவேற்று ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க 2022 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் திகதி நாடாளுமன்றின் ஊடாக தேர்ந்தெடுக்கப்பட்டு 21 ஆம் திகதி பதவியேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්