உள்நாடுசூடான செய்திகள் 1

ஈஸ்டர் தாக்குதலால் மாட்டிக்கொண்ட மைத்திரி – 2033வரை அவகாசம் கோருகின்றார்!

(UTV | கொழும்பு) –

இலங்­கையில் கடந்த 2019 ஏப்ரல் 21 இல் நடாத்­தப்­பட்ட தொடர் தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்கள் தொடர்பில் இன்னும் உண்மை வெளிப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. இந் நிலையில், அந்த கொடூர சம்­ப­வத்தை தடுக்கத் தவ­றி­ய­வர்கள் தொடர்பில் இலங்­கையின் உயர் நீதி­மன்றம் வர­லாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை அளித்து, நேற்று  12ஆம் திகதி புதன்கிழ­மை­யுடன் 6 மாதங்கள் நிறை­வ­டைந்­தது.

ஒரு தீர்ப்­புக்கு 6 மாதங்கள் நிறை­வ­டைது என்­பதில் அப்­படி என்ன முக்­கியம் இருக்­கி­றது என சிந்­திக்­கலாம். ஆம்.. ஒரு முக்­கி­ய­மான விடயம் இருக்­கின்­றது.

போது­மான உளவுத் தக­வல்கள் இருந்தும் 21/4 உயிர்த்த ஞாயிறு தின பயங்­க­ர­வாத தாக்­கு­தல்­களை தடுக்க தவ­றி­யதன் ஊடாக, இலங்­கை­யி­னு­டைய முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, முன்னாள் பாது­காப்பு செய­லாளர் ஹேம­சிறி பெர்­ணான்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர, முன்னர் தேசிய உளவுச் சேவையின் பணிப்­பா­ள­ராக இருந்த தற்­போ­தைய பொலிஸ் நிர்­வாக பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜய­வர்­தன, தேசிய உளவுச் சேவை பிர­தா­னி­யாக இருந்த சிசிர மெண்டிஸ் ஆகியோர் அடிப்­படை மனித உரி­மை­களை மீறி­யுள்­ள­தாக உயர் நீதி­மன்றம் கடந்த ஜன­வரி மாதம் 12 ஆம் திகதி தீர்ப்­ப­ளித்­தது. இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்பு ஊடாக உறுதி செய்­யப்­பட்­டுள்ள 12(1), 14 (உ) உறுப்­பு­ரைகள் ஊடாக கூறப்­படும் அடிப்­படை மனித உரி­மை­களை அவர்கள் மீறி­யுள்­ள­தாக உயர் நீதி­மன்றம் தீர்­மா­னித்து அந்த தீர்ப்பை அளித்­தி­ருந்­தது.

இதற்­க­மைய இலங்­கை­யி­னு­டைய முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன 100 மில்­லியன் ரூபாவை நட்ட ஈடாக செலுத்த வேண்­டு­மெ­னவும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர மற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜய­வர்­தன ஆகியோர் தலா 75 மில்­லியன் ரூபாவை நட்­ட­ஈ­டாக செலுத்த வேண்­டு­மெ­னவும் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் ஹேம­சிறி பெர்­னாண்டோ 50 மில்­லியன் ரூபாவை நட்­ட­ஈ­டாக செலுத்த வேண்­டு­மெ­னவும் தேசிய உளவுச் சேவை பிர­தா­னி­யாக இருந்த சிசிர மென்டிஸ் 10 மில்­லியன் ரூபாவை நட்­ட­ஈ­டாக செலுத்த வேண்­டு­மெ­னவும் உயர்­நீ­தி­மன்றம் ஆணை­யிட்­டது. இதனை விட அரசு ஒரு மில்­லியன் ரூபாவை நட்ட ஈடாக செலுத்த வேண்டும் எனவும் உயர் நீதி­மன்றம் ஆணை­யிட்­டது.

உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் கார­ண­மாக பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­காக இழப்­பீட்­டுக்­கான அலு­வ­லகம் ஒன்­றினை ஸ்தாபிக்­கு­மாறும், அவ்­வ­லு­வ­ல­கத்தின் கீழ் நிதியம் ஒன்­றினை ஏற்­ப­டுத்தி அந் நிதி­யத்தில் பிர­தி­வா­திகள் தமக்கு விதிக்­க­பப்ட்­டுள்ள உத்­த­ர­வுக்கு அமைய நட்ட ஈட்டுத் தொகையை வைப்புச் செய்ய வேண்டும் என உயர் நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டது.

அதன்­படி குறித்த நட்ட ஈட்டுத் தொகையை 6 மாதங்­க­ளுக்குள் செலுத்தி முடிக்க வேண்டும் என உயர் நீதி­மன்றம் கட்­டளை பிறப்­பித்­தி­ருந்­தது. இது தான் தீர்ப்­புக்கும் 6 மாதங்­க­ளுக்கும் இடை­யி­லான தொடர்பு.

பிர­தம நீதி­ய­ரசர் ஜயந்த ஜய­சூ­ரிய, நீதி­ய­ர­சர்­க­ளான புவ­னேக அலு­வி­ஹார, எல்.டி.பி.தெஹி­தெ­னிய, முர்து பெர்­ணான்டோ, எஸ். துரை­ராஜா, ஏ.எச்.எம்.டி. நவாஸ், ஷிரான் குண­ரத்ன ஆகியோர் அடங்­கிய ஏழுபேர் கொண்ட நீதி­ய­ர­சர்கள் குழாம் ஏக­ம­ன­தாக இந்த தீர்ப்பை அறி­வித்­தி­ருந்­தது.

ஆம், அந்த 6 மாதம்  நேற்­றுடன் நிறை­வ­டைந்­தது. ஆனால், இது­வரை அரசை தவிர,  எந்த பிர­தி­வா­தியும் உயர் நீதி­மன்ற உத்­த­ரவின் பிர­காரம்  முழு­மை­யான நட்ட ஈட்டுத் தொகையை செலுத்­த­வில்லை என அறிய முடி­கின்­றது.

அப்­ப‌­டி­யானால், நட்ட ஈட்டுத் தொகையை முழு­மை­யாக  செலுத்­தாத பட்­சத்தில் இலங்­கையின் முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உள்­ளிட்ட உயர் நீதி­மன்ற தீர்ப்பில் பெயர் குறிப்­பிட்டு நட்ட ஈடு செலுத்த கட்­டளை இடப்­பட்­ட­வர்கள் நீதி­மன்ற அவ­ம­திப்பு வழக்கை எதிர்க்­கொள்ள நேரி­டுமா? என்ற விடயம் பேசு­பொ­ரு­ளா­கி­யுள்­ளது. அப்­ப­டி­யான சூழல் உரு­வானால் அது இலங்­கையின் முன்னாள் ஜனா­தி­பதி, முன்னாள் பாது­காப்பு செயலர், முன்னாள் பொலிஸ் மா அதிபர் என அதி­கா­ரத்தில் இருந்த ஒரு குழு நீதி­மன்ற அவ­ம­திப்பு வழக்கை எதிர்கொள்ளும் முதல் சந்த்­தர்ப்­ப­மாக மாறும்.

எனினும் அப்­ப­டி­யான நிலைமை ஏற்­பட வாய்ப்­புக்கள் மிக அரிது என பேசப்­ப­டு­கின்­றது. காரணம், இந்த பிர­தி­வா­திகள் முழு­மை­யாக நட்ட ஈட்டை செலுத்­தாத போதும் சிறிய தொகை­களை நட்ட ஈடாக ட செலுத்­தி­யுள்­ளனர்.

உண்­மையில், நட்ட ஈடு செலுத்த உத்­த­ர­வி­டப்­பட்ட  முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உள்­ளிட்­ட­வர்கள், இந்த தற்­கொலை தாக்­கு­தலை தடுக்க தவ­றி­ய­மையை மிகத் தெளி­வாக சித்­தி­ரித்த உயர் நீதி­மன்­றத்தின் தீர்ப்பு மிகத் தெளி­வா­னது.

21/4 தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­தலில் தனது இரு பிள்­ளை­களை இழந்த தந்­தை­யான நந்­தன சிறி­மான்ன, சுற்­றுலா துறை வர்த்­தகர் ஜனக விதா­னகே, இரு கத்­தோ­லிக்க மத­கு­ருமார், ஷெங்­ரில்லா ஹோட்­டலில் குண்டுத் தாக்­கு­த­லில் சிக்­கிய சட்­டத்­த­ரணி மோதித்த ஏக்­க­நா­யக்க, கத்­தோ­லிக்க மதத் தலை­வர்கள், இலங்கை சட்­டத்­த­ர­ணிகள் சங்க தலைவர், ஹில்மி அஹமட், ஊட­க­வி­ய­லாளர் கசுன் புஸ்­ஸ­வெல்ல, உள்­ளிட்ட 12 தரப்­பினர் இந்த அடிப்­படை உரிமை மீறல் மனுக்­களை தாக்கல் செய்­தன‌ர்.

இதில் பிர­தி­வா­திகள் தரப்­பி­ன­ராக முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, முன்னாள் பிர­த­மரும் தற்­போ­தைய ஜனா­தி­ப­தி­யு­மான ரணில் விக்­ர­ம­சிங்க, அப்­போ­தைய அமைச்­ச­ரவை, முன்னாள் பாது­காப்பு செயலர் ஹேம­சிறி, பொலிஸ் மா அதிபர் பூஜித், தேசிய உளவுச் சேவையின் பணிப்­பா­ள­ராக இருந்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜய­வர்­தன, தேசிய உளவுச் சேவை பிர­தா­னி­யாக இருந்த சிசிர மெண்டிஸ், சில அமைச்­சுக்­களின் செய­லர்கள், பொலிஸ் பிர­தா­னிகள் மற்றும் சட்ட மா அதிபர் உள்­ளிட்டோர் பெய­ரி­டப்­பட்­டனர்.

இந் நிலையில் 12 மனுக்கள் குறித்த தனது இறுதித் தீர்ப்பை உயர் நீதி­மன்றம் கடந்த ஜன­வரி 12 ஆம் திகதி அறி­வித்­தது. அது 124 பக்­கங்­களை கொண்­டி­ருந்த நிலையில், தீர்ப்பின் சுருக்­கத்தை பிர­தம நீதி­ய­ரசர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி ஜயந்த ஜய­சூ­ரிய திறந்த மன்றில் வாசித்­தி­ருந்தார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் கார­ண­மாக பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­காக இழப்­பீட்­டுக்­கான அலு­வ­லகம் ஒன்­றினை ஸ்தாபிக்­கு­மாறும், அவ்­வ­லு­வ­ல­கத்தின் கீழ் நிதியம் ஒன்­றினை ஏற்­ப­டுத்தி அந் நிதி­யத்தில் பிர­தி­வா­திகள் தமக்கு விதிக்­கப்­பட்­டுள்ள உத்­த­ர­வுக்கு அமைய நட்ட ஈட்டுத் தொகையை வைப்புச் செய்ய வேண்டும் என உயர் நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டி­ருந்­தது.

நட்ட ஈடு செலுத்­து­வ­தற்­கான  காலம் நேற்­றுடன்  நிறை­வ­டைந்த  நிலையில், இது­வரை முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன 15 மில்­லியன் ரூபா­வையும், முன்னாள் பாது­காப்பு செயலர் ஹேம­சிறி பெர்­ணான்டோ ஒரு மில்­லியன் ரூபா­வையும்,  முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர 1,725,588 ரூபா­வையும்,  முன்னாள் உளவுத் துறை பிர­தானி சிசிர மெண்டிஸ் 5 மில்­லியன் ரூபா­வி­னையும், முன்னாள் தேசிய உளவுச் சேவை பிர­தா­னியும் தற்­போ­தைய பொலிஸ் நிர்­வாகப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதி­ப­ரு­மான நிலந்த ஜய­வர்­தன 4.1 மில்­லியன் ரூபா­வி­னையும்  நட்ட ஈடாக செலுத்­தி­யுள்­ளனர். இழப்­பீட்­டுக்­கான அலு­வ­லகம் ஊடாக அவர்கள் இந்த நட்ட ஈட்டுத் தொகை­யினை செலுத்­தி­யுள்­ளனர்.

இதனை விட அரசு ஒரு மில்­லியன் ரூபாவை நட்ட ஈடாக செலுத்த வேண்டும் என உயர் நீதி­மன்றம் ஆணை­யிட்­டி­ருந்த நிலையில், திறை­சேரி அந்த தொகை­யினை இழப்­பீட்­டுக்­கான அலு­வ­ல­கத்­துக்கு வழங்­கி­யுள்­ளது.

அதன்­படி, முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன 85 மில்­லியன் ரூபா­வையும் முன்னாள் பாது­காப்பு செயலர் ஹேம­சிறி  பெர்­ணான்டோ 49 மில்­லியன் ரூபா­வி­னையும், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர 73.274412 ரூபா­வி­னையும், முன்னாள் தேசிய உளவுச் சேவை பிர­தானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜய­வர்­தன 70.9 மில்­லியன் ரூபா­வி­னையும் முன்னாள் தேசிய உளவுச் சேவை பிர­தானி சிசிர மெண்டிஸ் 5 மில்­லியன் ரூபா­வி­னையும் , உயர் நீதி­மன்ற உத்­த­ர­வுப்­படி நட்ட ஈடாக இன்னும் செலுத்த வேண்­டி­யுள்­ளமை சுட்­டிக்­காட்­டத்­தக்­கது.

இவ்­வா­றான பின்­ன­ணியில்  இலங்­கையின் முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, உயர் நீதி­மன்றில்   நகர்த்தல் பத்­தி­ரத்தை ( motion)  ஒன்றை தாக்கல் செய்­துள்ளார்.   அதன்­படி,  முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, 100 மில்­லியன் ரூபா நட்ட ஈட்டில் வெறும் 15 மில்­லியன் ரூபாவை செலுத்­தி­யுள்ளார்.

அவர் தாக்கல் செய்­துள்ள நகர்த்தல் பத்­தி­ரத்தில்,  தனக்கு முன்னாள் ஜனா­தி­பதி எனும் ரீதியில் 97 ஆயி­ரத்து 500 ரூபா ஓய்­வூ­தியம் கிடைப்­ப­தா­கவும், பாரா­ளு­மன்ற உறுப்­பினர்  என்ற ரீதியில் 54 ஆயி­ரத்து 285 ரூபா கொடுப்பனவு கிடைப்பதாகவும்  மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, தற்போது தான் செலுத்தியுள்ள 15 மில்லியன் ரூபாவுக்கு மேலதிகமாக செலுத்த வேண்டிய 85 மில்லியன் ரூபாவை, 10 தவணைகளில், அதாவது  85 இலட்சம் ரூபா வீதம்  எதிர்வரும் 2024 ஜூன் 30 ஆம் திகதி முதல் 2033 ஜூன் 30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் வருடாந்தம் செலுத்தி  முடிக்க அனுமதிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்த நகர்த்தல் பத்திரம் ஊடாக கோரியுள்ளார்.

தாம் தவறிழைத்தது மாத்திரமன்றி நீதிமன்ற உத்தரவையம் மதிக்காது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நஷ்டயீடையும் செலுத்தாது காலத்தைக் கடத்தும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நீதித்துறை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

 

– Vidivelli

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி!

கந்துருகஸ்ஹார சிறைச்சாலையில் கைதி உயிரிழந்த சம்பவத்தில் மூவர் பணி நீக்கம்

பேரூந்து விபத்து தொடர்பில் விசேட விசாரணை ஆரம்பம்