உள்நாடுசூடான செய்திகள் 1

ஓய்விலுள்ள மஹிந்தவை நலம் விசாரிக்கச் செல்லும் நபர்களின் எண்ணிக்கை குறைவு!!

(UTV | கொழும்பு) –

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து நலம் விசாரிப்பதற்காக அரசியல்வாதிகள் செல்வது கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஓய்வுபெற்ற ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே மகிந்த பெரும்பாலும் வசிக்கிறார்.

இந்த நாட்களில் அவர் ஓய்வாக நேரத்தை கழிப்பதாக தெரியவந்துள்ளது. அவரது முழங்கால் மற்றும் முதுகுவலி காரணமாக, மருத்துவர்கள் அதிக ஓய்வு எடுக்குமாறு பரிந்துரைத்துள்ளனர். எனினும் கடந்த காலங்களில் மகிந்த ராஜபக்சவை சந்திப்பதற்காக தினமும் பெருமளவிலான மக்கள் வந்து சென்றனர் ஆனால் தற்போது அவரைச் சந்திக்க வருபவர்கள் மிகக்குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், அவருக்கு வரும் அழைப்புகள் மிகக்குறைவு மற்றும் முக்கிய அரசியல் கூட்டங்கள் பொதுஜன பெரமுனவால் ஏற்பாடு செய்யப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

 

Tamilwin

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரஞ்சன் தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு

யாழில் 7 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் அனுமதி

மறு அறிவித்தல் வரை ரயில் சேவைகள் சில இரத்து